பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகளந்தபெருமாள் 47

உரியவரான பெருமானைச் சேவிக்க வருகின்றோம். இந்த எம்பெருமானைப் பேயாழ்வார்.” திருமழிசையாழ்வார்,’ நம்மாழ்வார்,” திருமங்கையாழ்வார்’ ஆகிய நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். எம்பெருமான் இங்கு உரக வடிவத்திலும் (உரகம்-பாம்பு) சேவை சாதிப்பதால் இத்தலத்திற்கு ‘ஊரகம்’ என்ற திருநாமம் ஏற்பட்டதோ என்று சிந்தித்த வண்ணம் சந்நிதியில் நுழைகின்றோம். கருவறைக்கு முன்பதாக இடப் புறத்தில் சுவரில் உரக வடிவாகவுள்ள மூர்த்தியை முதலில் சேவிக்கின்றோம். இவரைத்தான் திருமங்கையாழ்வார் ‘நிறைந்த கச்சி ஊரகத்தாய்’ என்றும், ‘காமருபூம் கட்சி ஊரகத்தாய்” என்றும், ‘ஊரான்’’’ என்றும் மங்களாசாசனம் செய்தருளி யுள்ளனரோ என்று சிந்திக்கின்றோம். இந்த மூர்த்தியின் திருவபிடேகம் மிகவும் முக்கியமானது. ‘ஊரகத்தான் திருமஞ்சனப் பிரார்த்தனை’ பக்த கோடிகள் நன்கு அறிந்த நிகழ்ச்சி. இந்த எம்பெருமான் வரந்தரு வள்ளல் என்பதை அவர்கள் நன்கு அறிவர். இவருக்கு இனிப்புப் பண்டங்களை நிவேதனம் செய்தல் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

அடுத்து, கருவறையில் திரிவிக்கிரம் வடிவில் காட்சி தரும் உலகளந்த பெருமாளைச் சேவிக்கின்றோம். இவர் மேற்கு நோக்கியதிருமுக மண்டலத்துடன்நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். இவர் அருளும் சேவை மிகவும் அற்புதமானது. இவ்வளவு உயரமான திருமேனி எந்தத் திவ்விய தேசத்திலும் இல்லை. தீவட்டி வைத்துக்கொண்டுதான் திருமார்பு, திருமுகம், திருஅபிடேகம் முதலியவற்றைக் காண்டல் வேண்டும். இந்தத் திருமேனியை நினைந்தே நம்மாழ்வார்,

“நின்றஆறும் இருந்தஆறும் கிடந்தஆறும் நினைப்புஅரியன்’

என்று மங்களாசாசனம் செய்திருத்தல் வேண்டும். நின்ற ஆறு’ அவரை பிரம்மிக்கச் செய்திருத்தல் வேண்டும். அல்லது

23. மூன். திருவந்-64. 24. திருச். விருத்-63. 25. திருவாய் - 5.10:6.

26. பெரி.திரு 1.5:4: திருநெடுந்- 8,13; சிறிய திருமடல் -கண்ணி 70;

பெரிய திருமடல் கண்ணி 128. 27. திருநெடுந் - 8. 28. மேலது - 13. 29. பெரி. திரு.-1.5:4. 30. திருவாய் - 5-10:6.