பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்டப் பெருமாள் 61

வனவாசம் செய்தவன் சக்கரவர்த்தி திருமகன். அக்காலத்தில் இராவணனால் கவர்ந்து செல்லப்பெற்ற சீதாப்பிராட்டியை இலங்கையினின்றும் மீட்டுக் கொள்வதற்காக தென்கடலைக் கடக்க வேண்டியிருந்தது. வானர வீரர்களின் துணைக்கொண்டு நீரில் அமிழ்ந்து போகவேண்டிய மலைகளால் திருவணை அமைத்த பெருமான் இராமன். அவனே பரமேச்சுர விண்ணகரத்தில் எழுந்தருளியுள்ளான் என்பது ஆழ்வாரின் திருவுள்ளம்.

‘குடைத்திறல் மன்னவன் ஆய்,ஒருகால்

குரங்கைப் படையா மலையால்கடலை அடைத்தவன் எந்தைபிரானதுஇடம்”

(குடை-வெண்கொற்றக்குடை திறல்-பெருமிடுக்கு மன்னவன்.இராமன்: படையா சேனையாக்கொண்டு)

என்பது ஆழ்வாரின் சொல்லோவியம்.

அடுத்து, ‘பஞ்சிய மெல்லடி பின்னை திறத்து முன்நாள் பாய்விடைகள் ஏழ் அடர்த்திய கண்ணனை அநுசந்திக்கின்றார். அழகிற் சிறந்த நப்பின்னைப் பிராட்டியை மணந்து கொள்வதற் காக அவளது தந்தை கும்பன் யாவர்க்கும் அடங்காத அசுர ஆவேசம் கொண்ட ஏழு காளைகளைக் கன்யா சுல்கமாக வைத்தான். கண்ணன் ஏழு திருவுருக்கொண்டு சென்று அவற்றை வென்று வலியடக்கி நப்பின்னையை மணந்துகொண்டான் என்பதை நாம் அறிவோம். இந்த வரலாற்றைத் திருவுள்ளங் கொண்டு,

‘பிறைஉடை வாள்நுதல் பின்னைதிறத்து

முன்னே ஒருகால் செருவில் உருமின்

மறைஉடை மால்விடை ஏழ்அடர்த்தாற்கு

இடம்தான் தடம்சூழ்ந்து அழகாயகச்சி.

  • , 22

(பிறை-சந்திரகலை, வாள்நுதல் - ஒளியையுடைய நெற்றி, பின்னை திறந்து - நப்பின்னைக்காக; செரு-போர்; உருமின் இடிபோன்ற, மறை உடைஎதிர்த்துவரும்; மால் - பெரிய விடை - காளை, அடர்த்தல் - வலி அடக்குதல்)

என்ற பாசுரப் பகுதியில் காட்டுவர்.

இங்ஙனம் ஆழ்வார் கூறும் நான்கு அவதாரங்களும் நம்மை அவதார இரகசியத்தை நினைக்கச் செய்கின்றன. எம்பெரு

21. பெரி. திரு. 2.9:3. 22. பெரி. திரு . 2.9:9