பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைகுண்டப் பெருமாள் 63

“பதத்தமிழால் தன்னையே பாடுவித்து என்னைத்தன் பதத்து அடியார்ககே ஆட்படுத்தான்-இதத்த பரமேச் சுரவிண் ணகரான் பலஆன் வரமேச்சு உரல்அனைந்த மால்’

(பதத் தமிழ்-பக்குவமான தமிழ்; பதத்து அடியார். திருவடிகளில் தொண்டு பூண்டவர்; ஆட்படுத்தல் - அடிமையாக்குதல்; இதத்த-நன்மை செய்கின்ற; ஆன்-பசு; மேச்சு-மேய்த்து (மரூஉ); உரல் அணைந்த-உரலில் பிணிப் புண்டிருந்த, மால் - திருமால்)

என்ற பாசுரத்தையும் ஒதுகின்றோம். ‘எனக்கு யாதொரு தகுதியில்லாதிருக்கவும், எம்பெருமான் தன்னுடைய கருணை யால் எனக்கு அத்தகுதியை நல்கி வேதங்களாலும் அளவிட்டுக் கூறமுடியாத தன்னைப்பற்றிக் கவிபாடித் துதிக்கும்படி செய்து என்னைத் தன் அடியார்க்கு ஆட்படவும் செய்தான்’ என்று கூறும் கவிஞரின் அடக்கப் பண்பைப் போற்றுகின்றோம். “'என்னால் தன்னை இன் கவி பாடிய ஈசனை’ ‘என்னால் தன்னை வன்கவி பாடும் வைகுந்த நாதனே’ என்பன போன்ற நம்மாழ்வார் பாசுரங்களே திவ்வியகவி தன் பாசுரத்தை அமைக்கத் துணை செய்திருத்தல் கூடும் என்றும் சிந்திக்கின் றோம்.

இத்திருக்கோயிலின் விமானம் முகுந்த விமானம்’ என்று வழங்கப்பெறுகின்றது. விமானத்தில் இரண்டு சந்நிதிகள் உள்ளன. மேல் தளத்திலுள்ள (First floor) சந்நிதியில் எம்பெருமான் அனந்தாழ்வான்மீது சயனத்திருக்கோலத்தில் காட்சி அளிக்கின்றான். அதற்கு அடுத்துள்ள மேல்தளத்தில் (Second floor) அவன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றான். கீழ்ச்சந்நிதியில் (Ground floor) இருந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் எம்பெருமான் பரத்துவ நிலையைக் காட்டுவதாகும். இடைத்தளத்திலுள்ள அவன் வியூக நிலையைக் காட்டுவதாகவும் கொள்ளலாம்.

இந்தச் சந்நிதியைத் திவ்வியப்பிரபந்தம் ‘பரமேச்சுர விண்ணகரம்’ என்று குறிப்பிடும். பரமேச்சுரன் (பரமபத நாதன்-தேவாதி தேவன்) எழுந்தருளியிருக்கும் திவ்விய நகரமாதல்பற்றிப் பரமேச்சுர விண்ணகரம்’ என்று வழங்கி

24. நூற். திருப். அந் - 87. 25, திருவாய் - 7.9:1. 26. மேலது - 7.9:6.