பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும்

தென்னகத்தில் திருக்கோயில்கள் நிரம்பிய நகரங்கள் இரண்டு. ஒன்று காஞ்சிபுரம்; மற்றொன்று திருக்குடந்தை; குடமூக்கு என வழங்கப்பெறும் கும்பகோணம். எங்குப் பார்த்தாலும் பூங்காக்கள் மலிந்து காணப்படும் பெங்களுரையும் மைசூரையும் ‘பூங்கா நகரங்கள்” (Garden cities) என்று வழங்குவதைப் போலவே, இந்த இரண்டு நகரங்களையும் ‘கோயில் நகரங்கள்’ (Temple cities) என்று வழங்கலாம். இவற்றுள் காஞ்சி மிகப் பழம்பெரும் பெருமை வாய்ந்தது. இயேசு பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்னரே இதன் வரலாறு தொடங்குகின்றது பதஞ்சலியின் மாபாடியத்திலும், பெரும்பாணாற்றுப்படையிலும், மணிமேகலையிலும் இந் நகரத்தைப்பற்றிய குறிப்புகள் காணப்பெறுகின்றன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இந்நகரம் காஞ்சி, காஞ்சிபுரம், காஞ்சிபுரி, கச்சி முதலிய பெயர்களால் வழங்கப் பெறுகின்றன. பழைய கல்வெட்டுக்களில் ‘கச்சிப்பேடு” என்று வழங்கப்பெறுவதையே ‘காஞ்சி’ என்று கருதுகின்றனர் வரலாற்று அறிஞர்கள். தமிழகத்து ஞானச் செல்வர்கள் இந்நகரைத் தம் நூல்களில் ‘கச்சி’ என்றே வழங்குகின்றனர். எனினும், இன்று எங்ஙனும் பெருவழக்காக இருப்பது காஞ்சிபுரம்’ என்ற பெயரேயாகும். ‘காஞ்சிபுரம் பட்டு’ இந்நகரத்தின் பெயரைப் பாமரமக்கள் உள்ளத்திலும் நிலைக்கச் செய்துவிட்டது.

சுமார் ஐந்து மைலுக்கு மேல் நீண்டிருப்பது இந்நகரம். இதனை இரண்டு கூறுகளாக்கிச் சிவகாஞ்சி (பெரிய காஞ்சி), விஷ்ணு காஞ்சி (சின்ன காஞ்சி)” என்று பெயரிட்டுள்ளனர். பெரிய காஞ்சியில் உள்ள பெரிய கோயில் ஏகாம்பரநாதர் கோவில்; சின்ன காஞ்சியில் உள்ள பெரியகோயில் வரதராசர் திருக்கோயில். இந்த இரண்டு பகுதிகளிலும் திருமால் ஆலயங்கள்

1. யதோக்த காரி என்ற திருமால் ஆலயத்தை வெஃகா என்று குறிப்பிடுகின்றது

. வரி - (290-91). 2. ஜைன காஞ்சி தான் சின்ன காஞ்சி ஆயிற்று என்பர் ஆய்வாளர்கள்.

தொ.நா-5