பக்கம்:தொண்டைநாட்டுத் திருப்பதிகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சியில் ஆறும் புறத்தில் ஒன்றும் 77

கணவன்மீது வெகுண்டெழுந்த நாமகள் அவ்வேள்வி நடை பெறாதிருக்கப் பல இடையூறுகளை விளைவித்தாள். ஆயினும், எம்பெருமான் பல்வேறு வடிவங்களுடன் தோன்றி அவற்றைப் போக்கினான். ஒருசமயம் யாகம் செய்த இடம் முழுவதும் பேரிருள் சூழுமாறு செய்தது அங்ஙனம் விளைவித்த தடைகளுள் ஒன்று. அத்தடையை நீக்கப் பரஞ்சோதியாகிய எம்பெருமான் விளக்கொளியாய்த் தோன்றி அவ்விருளைப் போக்கினான். பரஞ்சோதிக்கு முன்னர் எந்த இருளும் இருக்க முடியாது என்ற பேருண்மையை உணர்ந்தாள் நாமகள். இந்த வரலாற்றின் நினைவாக நான்முகன் வேண்டுகோளுக்கிணங்க இன்றும் ‘விளக்கொளியாக’, நம்போலியரும் வணங்குவதற்காக, ‘பின்னானார் வணங்கும் சோதியாகத் திகழ்ந்து திருத்தண் காவில் சேவை சாதிக்கின்றான் எம்பெருமான். இந்தப் புராண வரலாற்றைச் சிந்தித்தவண்ணம் அடுத்த திவ்விய தேசத்தை நாடிச் செல்லுகின்றோம்.

திருப்பவள வண்ணம் : பெரிய காஞ்சிபுரத்தில் வைகுண்டப் பெருமாள் திருக்கோயிலின் அருகிலுள்ளது இந்தத் திவ்விய தேசம். திருமங்கையாழ்வார்திருநெடுந்தாண்டகத்தில் குறிப்பிடும் ‘கச்சிப் பவளண்ணா!’ என்ற சொற்றொடரைத் தவிர ஆழ்வார் பாசுரங்களில் இந்த எம்பெருமானைப்பற்றி வேறு குறிப்புகள் இல்லை. ஆழ்வார் குறிப்பிடும் சொற்றொடரைக்கொண்ட பாசுரம் முழுவதையும் காண்போம்.

“வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர்

மல்லையாய்! மதிள்கச்சி ஊராய்! பேராய்! கொங்குத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்

குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான் பங்கத்தாய் ! பாற்கடலாய் ! பாரின் மேலாய்!

பனிவரையின் உச்சியாய் ! பவள வண்ணா ! எங்குற்றாய்? எம்பெருமான் உன்னை நாடி

ஏழையேன் இங்ஙனே உழிதர் கேனே.”

(வங்கம்-கப்பல்; முந்நீர்-கடல்; கச்சி ஊராய். வெஃகாவில் உள்ள பெருமாளே பேராய்-திருப்பேர் நகரானே கொங்கு-தேன்; அலங்கல்-மாலை; குலவரையன் மடப்பாவை-பார்வதி, பக்கத்தாய்-பக்கத்திலுள்ளவனே: பார்-பூமி (பூமியில் சஞ்சரித்தவன்); பனிவரை-திருமலை, உழிதருதல் - அலைதல்)

38. திருநெடுந் - 9.