பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

  • பெண்ணின் நல் லாளே ஒர் பாகம் வைத்துக் கண்ணினுல் காமனக் காய்ந்தவன்தன் விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் பணங்குநல் மால்பேறே

. -முதல் திருமுறை. இப்பாடல் ஒரு நயமான கருத்தைத் தன்ன கத்தே கொண்டுளது. அதாவது இறைவர் உமை. அம்மையைப் பாகத்தில் கொண்டிருந்தும் மன்மதனே, எரித்தனர் என்பது, இதன் கருத்து மன்மதன் குறும்பு இறைவர்பால் செல்லாது என்பது.

அப்பர் இத்தலத்து இறைவர் மீது பாடியுள்ள திருவிருத்தங்கள் இரண்டு. இவ்விருத்தங்களின் வழி இறைவர் திருவடிகள் தொண்டர்களால் போற்றப்படும், துதிக்கப்படும் தன்மையின என்றும், அன்புகாட்டில்ை குருடர்களுக்குக் கோல்போல் முன் வந்து வழி காட்டுவன என்றும், இறைவியினுல் வருடப் படுவன என்றும் கூறப்பட்டிருப்பதை, உணரலாம். ஆகவே, இவ்விரு திருவிருத்தங்களும் இறைவருடைய திருவடிகளைப் புகழும் பாடல்கள் என்னலாம். இக்கருத்துகளேக் கீழ்வரும் பாடல்களில்: డి ట్రౌఢీ

  • மாணிக் குயிர்பெறக் கூற்றை உதைத்தன மாவலியால்

காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்தும்.அஃதே மாணிக்கம் ஆவன மால்பே றுடையான் மலர் அடியே'.

நல்லசள் . உமை அம்மை, காய்ந்தவன் - அழித்தவன், தானவர் . அரக்கர், மாணிக்கு மார்க்கண்டேயனுக்கு கூற்றை - இயமன, நிலம் இரந்தவன் - நிலத்தைக் கேட்ட வாமனனும் திருமால், பேணி போற்றி, பரவ - வணங்க, பேர்த்தும் . மீண்டும்.