பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

t திருமால்பேறு 35。

திருஞான சம்பந்தரது மற்ருெரு பதிகத்தின் வழி நாம் அறிவன:

இறைவர் குருந்த மரத்தடியில் இருப்பவர் என்று திருஞான சம்பந்தர் கூறுவர். இதனுல் மாணிக்க வாசகர்க்குப் பின்பட்டவர் திருஞான சம்பந்தர் என்பது பெறப்படுதல் காண்க. மானிக்க வாசகர் பொருட்டே இறைவர் குருந்த மரத்தடியில்

குருவாக எழுந்தருளினர்.

ஈண்டு இறைவியார் கருந்தட மலர்க்கண்ணி என்று கூறப்படுகின் ருர், இதல்ை தடங்கண்ணி என்பது இறைவியின் திருப்பெயர் என்பது தெரி கிறது. இதனே வடமொழியாளர்கள் விசாலாட்சி என்று கூறி மகிழ்வர்.

தேவர்களும், அரக்கர்களும், முனிவர்களும், பூலோக வாசிகளும் வணங்கும் நல்மால்பேறு என்றும் இத்தலம் சிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை * விண்ணவர், தானவர் முனிவரொடு, மண்ணவர் வணங்கும் நல் மால்பேறு' என்னும் வரிகளில் காணலாம்.

திருஞான சம்பந்தர் தமது திருக்கடைக் காப்புச் செய்யுளில் தம்மை 'அந்தம் இல் ஞானசம்பந்தன்? என்று கூறிக் கொள்கின்றனர். அதற்குக் காரணம் தம் வாக்கும், தம் பெயரும் நில உலகில் என்றும் நிலத்திருக்கும் என்னும் உறுதியால் என்க. அந்த மில் என்பதன் பொருள் அழிவில்லாத என்பது. அவரது பாடல் அழியாது என்று மேலே அவரே குறிப்பிடுவதால் உரை பொருத்தமே என்பது அறிய வருகின்றது. இப்பதிகப் பாடல்களேச் சந்த முடன் (இசையுடன்) பாடவல்லார் இறைவன் திருவடிப் பேற்றை அடைவர். இப்பதிகத்தின் ஏழாவது பாடல் கிடைத்திலது,