பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 . . திருமால்பேறு 99.

இறைவனது தண் அருள் எத்தகையது என் பதை உணர்த்தும்போது,

  • மழுவ லான் திரு நாமம் மகிழ்ந்துரைத்

தழவ லார்களுக் கன்பு செய் தின்பொடும் வழுவி லா அருள் செய்தவன் .' என்று உணர்த்தியுள்ளனர்.

அப்பர் பெருமான், யார் ஒருவர் திருமால் பேற்றைத் தொழுகிருர்களோ, அவர்கள் எந்தமை ஆளுடையார்கள் என்று தம் பணிவு தோன்ற மொழிந்துள்ளார். திருமால் பேறு,

மாதவர் பயில் மால்பேறு ' வார்கொள் நல்முர சம் அறை அவ் அறை § 9 வார்கொள் பைம்பொழில் மால்பேறு ' கிளர்வண்டு சேர்பொழில் மால்பேறு ' மாடம் நீடுயரும் திருமால் பேறு ' என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது.

திருநாவுக்கரசரது மற்றும் ஒரு திருக்குறுந் தொகை வழி நாம் அறிவன : இக்குறுந்தொகைப் பதிகத்தில் எட்டே பாடல்கள் உள்ளன. அவைகள் நெஞ்சிற்கு அறிவுறுத்துவனவாகவும், உபதேச மொழிகள் அமைந்தவையாகவும் இருக்கின்றன.

1 சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்

கோத்தி ரமும்குல மும் கொண்டென் செய்வீர் பாத்தி ரம்சிவம் என்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளும் மால் பேறரே '

நாமம் - திருப்பெயர், வழுவில: - தவருத, வார் - தோல்வார், அறை ஒலிக்கும். சமுக்கர்காள் - அறிவற்றவர் களே, பாத்திரம் - வணங்கப்படுதற்குரியவர், மாத்திரை . நொடிப் பொழுதில், அஞ்செழுத்து - சிவாய நம எனும் ஐந்தெழுத்து மந்திரம்.