பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இறைவரது கருணையின் தன்மையை அப்பர்,

குறையாத உவகைக் கண்ணிர் ஆருத ஆனந்தத் தடியார் செய்த

அனுசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும் சீருத பெருமான் ' என்று அருளிச் செய்துள்ளனர்.

இது திருமால்பேற்றுத் திருப்பதிகம் ஆயினும், இதில் திருவேகம்பம், திருமறைக்காடு, திருஒற்றியூர், திருக்காளத்தி ஆகிய தலப் பெயர்களும் காணப் படுகின்றன. இந்தாண்டகத்தின் ஒல்வொரு பாட லின் ஈற்றிலும் "திருமேல் பேற்று எம் செம்பவளக் குன்றினைச் சென்றடைந்தேன் நானே' என்னும் முடிபு உளது.

பிறப்பானைப் பிறவாத பெருமை யானைப்

பெரியானே அரியானேப் பெண் ஆண் ஆய

திறத்தானை நின்மலனே நினையா தாரை

நினையான நினைவோரை நினைவோன் தன்னை

அறத்தானை அறவோனே ஐயன் தன்னே

அண்ணல்தனே நண்ணரிய அமரர் ஏத்தும்

திறத்தானத் திகழ்ஒளியைத் திருமால் பேற்றெம்

செம்பவளக் குன்றினைச் சென் றடைந்தேன் நானே?"

சீருத - கோபியாத, பிறப்பானே - ஒரு தாயர் வயிற்றில் பிறவாமல் அன்பர்கட்கு அருள் செய்ய வேண்டி அங்கங்குத் தோன்றுபவனே. நின்மலன் - குற்றம் அற்றவன், நண்ணரிய நெருங்க முடியாத அமரர் தேவர், ஏத்தும் போற்றும்.