பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. திருவூறல்

இத் தலம் தக்கோலம் இரயில் அடியிலிருந்து நாலு கல் தொலைவில் இருக்கிறது. வண்டி போக்கு வரவு உண்டு. இக் கோவிலுக்குள் உள்ள ஒரு நதியின் வாயிலிருந்து தண்ணிர் வந்த வண்ணுமாக இருக்கும். இந்நந்தி கோவில் மதிலோரத்தின் கிழக்கே இருக்கும் கங்காதரர் சந்நிதியின் மேற்குப் பிராகாரத்தில் உள்ளது. இதனை இதுபோதும் கோவிலுக்குள் சென்ருல் காணலாம். இறைவ: ருடைய திருவடிகளிலும் தண்ணிர் சுரக்கின்றது. இக் காரணத்தைக் கொண்டே (அதாவது நீர் ஊற்றெடுத்து வரும் காரணத்தால்) இது திருவூறல் என்னும் பெயரைக் கொண்டுள்ளது. உள்ளே இருக்கும் நந்தியின் வாயிலிருந்து வரும் நீரை வெளியில் குழாயின் மூலம் வெளிவருமாறு செய்து வெளியில் ஒரு நந்தி உருவை அமைத்து அதன் வாயிலில் நீர் வருமாறு செய்து நீரைத் தேக்கி அதில் மக்கள் குளிக்க வசதி செய்துள்ளனர், இந்த இடம் நந்தி மடு எனப்படும். இந் நந்தி மடுவில் நீராடுதல் விசேடமாகும். கோயிலின் மேற்புரம் மலச்சரிவில் ஓர் இயற்கை ஊற்று உளது. இதிலிருந்து வரும் தண்ணிரே கோவில் நந்தியின் வாயினின்று வந்து கொண்டிருக்கிறது. அது சிற்பியின் நுண்ணறிவு திறல்ை அமைந்த கைத்திறன்.

இது சம்வர்த்த முனிவர் பூசித்த தலம். உமை அம்மையாரும் வழிபட்ட கோவில். இந்திரன், இயமன், சூரியன், சந்திரன் பாண்டவர்களும் வழி பட்டுள்ளனர். இங்குள்ள இறைவர் ஜலநாதேஸ் வரர், உமாபதீஸ்வரர் என்றும், இறைவியார் உமை அம்மை, கிரிஜல கன்னிகாம்பா என்றும் அழைக்கப் பெறுவர். இங்குள்ள தீர்த்தம் பார்வதி தீர்த்தம்.