பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4ே தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இது பின்னல் விஜயநகர மன்னர்களால் நந்தி தீத்தம் என்று அழைக்கப்பட்டது. இங்கு விருத்த rரம் என்னும் குசத்தலே ஆறு ஒடுகிறது.

திருவூறல் உள்ள கிராமம் தக்கோலம். இந்தக் கிராமம் சரித்திரப் புகழ் வாய்ந்தது. இங்குச் சோழ மன்னனும் இராசாதித்தனுக்கும் புதிய கங்க அரச னை இரண்டாம் பூதுகனுக்கும் போர் நடந்துள்ளது. அந்த இடம் இதுபோது பெரிய மணல் வெளியாக இருக்கிறது.

இங்குள்ள கல்வெட்டின் மூலம் இறைவர் ஜல நந்தீஸ்வரர் என்று குறிக்கப்பட்டுள்ளனர். இத் தலத்திற்குப் பற்பலர் வெள்ளிப் பாத்திரங்களையும், பசுக்களையும், நிலங்களையும் தானம் செய்துள்ளார் கள் என்பதும் தெரிகிறது. துர்க்கை சிலைக்கு விளக்கு கள் அளிக்கப்பட்டுள்ளன. மற்றும் சிலர், பொன்னும், பணமும், ஆடுகளும், நெல்லும் அளித்துள்ளனர்.

இத் தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பதிகம் ஒன்றே உளது. இப் பதிகத்தை ஒருவாறு ஆசிரியத் துறையில் அடக்கலாம். இதற்குக் காரணம் ஒவ் வொரு பாடலின் நான்கு அடிகளும் ஒத்த சீர்களைப் பெருமல், முதல் அடியும் மூன்ருவது அடியும் ஐந் தைந்து சீர்களேயும் இரண்டாவது அடியும் நான்கா வது அடியும் நான்கு சீர்களேயும் பெற்றிருப்பதனுல் எண்க. இதன் பண் வியாழக் குறிஞ்சி. இதனை இக் காலச் செளராஷ்டிர இராகம் என ஒருவாறு கூற லாம். இப்பதிகத்தால் அறிவன: திருஞான சம்பந்தர் இப்பதிகத்தில் மக்களைத் தம்முடன் இணைத்து, "திருஊறலே உள்குதும்” என்று ஒவ்வொரு பாட லிலும் அமைத்து அழைத்து உபதேசம் செய்கின் ருர். இறைவரைப் பற்றிப் பேசுகையில்,

உள்குதும் - நினைப்போம்.