பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

கயில், பிரிந்து இருக்கின்ற ஆன்மா, இணைந்த காலத்து ஏற்பட்ட சிவானந்த அனுபவத்தால் உண் டாகிய ஒளி குறைய, அதனை எண்ணி 'ஆன்ம நாயகிய்ை வந்தேற்றுக் கொண்ட தேவரீர், இப்படி இடையே பிரிவு நேரச் செய்யலாமா” என்று வருந்திக் கூறுவது என்பது. மேலும், இப்பதிகத்தில் திரு ஞான சம்பந்தர் பாடுவன அனைத்தும், தம் வாக்கு அன்று. இறைவன் வாக்கே என்பதை ஒவ்வொரு பாடலிலும் ' எனதுரை தனதுரை யாக ' என்று வற் புறுத்திக் கூறியுள்ளனர். ஒவ்வொரு பாட்டின் இறுதி யிலும், தாம் காதல் மிகுதியும் கொண்ட காரணத் தால் இறைவர் தம் அழகினைக் கொள்ளே கொண்டார் என்பதையும் " என் எழில் நலம் கொள்வது இயல்பே : என்றும் பாடி யுள்ளனர். இப்பதிகத்தில் திரு இலம் பையங் கோட்டுர் இயற்கை வர்ணனை இனிதாக இயம்பப் பட்டுள்ளது. இப்பதிகத்தின் மூன்ருவது பாடலில் வரும் 'பாலனும் விருத்தனும்” எனும் தொடர் திருவிளையாடல் புராணத்தில் வரும் விருத்த குமார பாலரான படல வரலாற்றை நினைப்பிக்கிறது.

இத்தலத்துப் பதிகத்தில் சீடர்ப்பதமலை, திருட் பூந்துருத்தி, திருமால் பேறு, திருமறைக்காடு, திரு நெய்த்தானம், திருநின்றியூர், திருக்கழிப்பாலே, கச்சி யேகம்பம், திருஒற்றியூர், திருஅண்ணுமலே ஆகிய திருத்தலங்களையும் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். இத்தலத்துப் பதிகத்தின் ஒவ்வொரு பாட்டிலும் “என்னதுரை தனதுரையாக" என்று குறிப்பிட்டிருப் பதை உற்று நோக்குகையில், திருஞானசம்பந்தர் வாக்குகள் அனைத்தும் இறைவர் வாக்கு என்பது புலப்படுகிறது அன்ருே !

இறைவர், தம்மை யார் தம் மனத்தில் நினைந்து வழிபடுகின்ருர்களோ, அவர்களின் சென்னியில்