பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இப் பதிகத்தைப் பாட வல்லார்க்குப் பாவம் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. .

திருஞான சம்பந்தர் தம்மைத் தமிழ் ஞான சம்பந்தர் என்று கூறிக்கொள்கின்றனர்.

தமிழின் சிறப்பைக் கூறுமிடத்து யாரும் நாட வல்ல நமிழ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்மையில் சமனெடு சிவ ரக்கையர் நீர்மை இல் உரைகள்கொள் ளாத நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையி குன்இடம் திருவில் கோலமே

-மூன்ரும் திருமுறை

15. திருவாலங்காடு

இத்தலம் வடமொழியில் வடாரண்யம் என்று கூறப்பெறும். வடம் என்பது ஆலமரம், ஆரண்யம் என்பது காடு. நடராசர் நடனம் புரியும் சபைகள் பல ஆயினும், சிறப்பாகக் கூறப்படுவன ஐந்து. முதலாவது பொற் சபை, இது சிதம்பரத்தில் உள்ளது. இரண்டாவது வெள்ளி அம்பலம், இதனை மதுரையில் காணலாம். மூன்ருவது தாம்பர சபை (செம்பு), இது திருநெல்வேலியில் உள்ளது. நான்காவது சபை சித்திர சபை. இது கற்ருலத்தில் இருக்கிறது. ஐந்தாவது இரத்தின சபை. இதனை மணிமன்று என்றும் கூறுவர். இது திருவாலங் காட்டில் இருக்கிறது. இந்த இரத்தின சபையில்தான்

சிவரக்கையர் . பெளத்த துறவிகள், சீவரம் - பவுத்தர் உடுக்கும் காவி ஆடை, கையன் - வெறுக்கத் தக்கவர், தீர்மை தன்மை, பார் . பூமியில், மலி - மிக்க, பரிந்து - இரக்கம் காட்டி, நல்கிடும் - தரும்.