பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. திருவில்கோலம் ; : 3

இத் தலத்து இறைவனுரைக் காளியும், இந்திரனும் பூசித்துள்ளனர். தீர்த்தங்கள் ஆவிற் கோல தீர்த்தம்; கூபாக்கினி தீர்த்தம் என்பன. இத் தலத்திற்குத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய தல புராணம் உண்டு.

கல் வெட்டால் அறிய வருவன கீழ்வருவன : இத் தலத்து இறைவியாரின் திருப்பெயர் பை அரவு, அல்குல் அம்மையார் என்பது. இவ்வம்மையாரின் வெள்ளிக்கிழமை வழிபாட்டிற்கு இம்மடி சென்னம்ம நாயகரும், விற்கோல ஊராரும் நிவந்தம் அளித் துள்ளனர்.

இத் தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பாடி யுள்ள பதிகம் ஒன்றே உளது. இப் பதிகம் கலி விருத்தத்தால் ஆயது. இதில் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் அடிக்கு ஈர் அசைச் சீர்கள் நான்கு நான்கு பெற்று வருவதனுல் இப் பெயர் பெற்றது. இப் பதிகப் பண் காந்தாரம் பஞ்சமம். இதனே இக்காலத்துக் கேதாரகெள்ள இசையில் அடக்கலாம். இப்பதிகத்தின் எட்டாம் பாட்டுச் சிதைந்து போயிற்று. இப்பதிகத்தால் நாம் அறிவன:

இப் பதிகத்தில் இறைவர் நல் அதிசயன், முந்தினுன், நேசர்க்குப் பார்மலி பெருஞ்செல்வம் ப்ரிந்து நல்கிடும் சீர்மையினுன் என்று சிறப்பிக்கப் பட்டுள்ளார். இத்தலம்,

கொந்துலாம் மலர்ப்பொழில் கூகம். '

வளர்பொழில் கூகம் ”

சேட ைசெழுமதில் திருவில் கோலம் ” எனப் புகழப்பட்டுள்ளது.

கொந்து - கொத்து, பொழில் - சோலே, கூகம் திருக் கூவம் (திருவிற் கோலம்) சேடன . எல்லாம் அழியத் தான் மட்டும் மிச்சமாய் இருப்பவகுன் சிவபெருமானுடைய,

8