பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

14. திருவில்கோலம்

இறைவர் திரிபுரம் எரித்தபோது வில்லேந்தியூ கோலத்துடன் துலங்கினர். அக்கோலத்துடன் இங்கு வீற்றிருத்தலின் இத்தலம் இப்பெயர் பெற்றது. இத் தலம் கூவம் என்றும் கூறப் பெறுகிறது. ஆனல் பதிகத்தில் கூவரம் என்று கூறப்பட்டுள்ளது. தேரின் கூவரம் (ஏர்க்கால்) உடைந்த காரணத்தால் கூவம் எனப் பெயர் பெற்றதாகக் காரணம் கூறுவர். திரிபுரதகனக் குறிப்பு இப்பதிகத்தில் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது. இக் குறிப்பு இரண்டாவது, நான்காவது, ஆருவது, ஏழாவது, ஒன்பதாவது பாடல்களில் காணப்படுதலை அறிக. இறைவர் திரிபுராந்தகேசுவர் என்று கூறப்பெறுவர். தேவி யார் திரிபுராந்தக நாயகி ஆவார். இத் தலத்து இறை வர் தீண்டாத திருமேனியுடையவர். பெருமழை, மழை இன்மை, போர் இவை நிகழ இருக்கும்போது இறைவர் தம் திருமேனியில் பல்வேறு நிறம் தோன்ற விளங்குவர். இதனைக் கொண்டே திருஞான சம்பந்: தர் இறைவரைத் தம் பதிகத்தில் மூன்ரும் பாடலில், * ஐயன் நல் அதிசயன்' என்று புகழ்ந்து கூறியுள் ளார். இறைவர்க்குப் பன்னிரண்டு திருப்பெயர்கள் உண்டு என்பதை இத்தல புராணம் அறிவிக்கிறது.

இத் தலத்தைக் கடம்பத்துசர் இரயில் அடியி லிருந்து தென்மேற்கே ஐந்து, ஆறு கல் சென்ருல் அடையலாம். பஸ் வசதியும் உண்டு. கோயிலுக்குக் கிழக்கே திருக்குளம் உளது. ஊற்று நீரே இறை வரின் முழுக்குக்குப் பயன்படுகிறது. இத்தீர்த்தத். தைக் கொண்டு வரவேண்டிய கடப்பாடு உடையவர் வைணவப் பிராம்மணர் ஆவார். (திருக்கழுக் குன்றத்து இறைவர்க்கும் திருமஞ்சன நீர் முதலிய வற்றை வைணவப் பிராம்மணர்தாம் கொண்டுவர வேண்டியவர்.)