பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதிலங்கள்

பட்ட வாய்ப்புப் பெற்றவன் என்றும், தம் பதிகத்தில் கூறுகிருர். தாம் பெண்களின் ಹ6TV வலையில் சிக்கி அதிவழிந்து நின்று திருவடி மறந்தவர் என்றும் குறிப்புட்டுள்ளனர். இக் கருத்துகளே,

பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் ' * மறிநேர் ஒண்கண் மடநல்லார் வலையில் பட்டு மதிமயங்கு: அறிவே அழிந்தேன் ” - * வேலங்காடு தடங்கண்ணுச் ഖ8ാഴ്ച് பட்டுன் நெறி மறந்து மாலங்கா டி மறந்தொழிந்தேனே ” என வரும் வரிகளில் காண்க.

பழையனூர், "பண்ணுர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் ' என்றும், " பல்மாமலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர் என்றும் புகழப்பட்டுள்ளது.

சுந்தரரை இறைவர் தடுத்தாட் கொண்ட குறிப்பு இப் பதிகத்தில் வரும்,

மெய்யே வந்திங் கெனயாண்ட மெய்யா !” என்னும் வரி அறிவிக்கிறது. இதல்ை இறைவர் சுந்தரரைத் தடுத்தாட் கொண்ட செய்தி உறுதி யாகிறது. மேலும் சுந்தரர் சங்கிலியார் கண் வலையில் சிக்கி மயங்கினர் என்பது,

பறிநேர் ஒண்கண் மடநல்லா வலேயிற் பட்டு மதிமயங்கி அறிவே அழிந்தேன். ' என்னும் வரிகளாலும்,

புறம்புறமே வெளியே. மறி - மான், ஒண்கண் . ஒளி பொருந்திய கண்கள், மடநல்லார் . இளம் பெண்கள், மதி அறிவு. தடம் - விசாலம். கண்ணுர் - கண்களேயுடைய பெண்கள். மால் - மயக்கம், ஆடி - திரிந்து. வேலங்காடு தடங்களுர் . வேல்போல் கூரிய பார்வையுடைய விசாலமான கண்களைப் பெற்ற பெண்கள். வேல் + அங்கு + ஆடு = வேலங்காடு எனப்பிரிக்க, ஏத்தும் - போற்றும்.