பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருவாலங்காடு 慧8富

  • வேலங் காடு தடங்கண்ணுர் வலேயுட் பட்டுன் நெறிமறந்து ஆமாலங்கா டி மறந்தொழிந்தேன். '

என்னும் வரிகளாலும் புலனுகின்றது.

சுந்தரர் குடும்பம், ஏழ் ஏழ் தலைமுறையாகத் திருவாரூர்த் தியாகேசருக்கு அடிமை என்னும் குறிப்பு, இப் பதிகத்தின் ஒன்பதாவது பாடலில் வரும், * எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட பெம்மான்' என்னும் அடிகளைக் கொண்டு உணர்ந்து கொள்ளலாம்.

சுந்தரர் தம் அடக்கம் தோன்ற இறைவனது அடிமைத் திறத்தை வேண்டி இருப்பவர் என்றும், சிறுவன் என்றும், இறைவனும் சித்தரிடம் உள் ளத்தை வைத்தவர் என்றும் கூறிக் கொள்கின்றனர். இதனே, .

"அத்தன் ஆலங் காடன் தன் அடிமைத் திறமே அன்பாகிச் சித்தர் சித்தம் வைத்த புகழ்ச் சிறுவன்’ என்னும் வரிகளால் உணர்ந்து கொள்ளலாம்.

தமிழை ஒண்தமிழ் என்று சிறப்பிக்கின்ருர். இப் பதிகப் பாடல் பத்தையும் பாடி ஆடுபவர்

இறைவர் திருவடி போற்றும் பேற்றைப் பெறுவர் என்றும் கூறியுள்ளனர்,

'ஒண்தமிழ்கள், பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவா ரே'

என்னும் வரிகளைக் காண்க.

எம்மான் - என் தந்தை. மூத்தப்பன் - பன்ட் டன்.

விட்டிகளில் - தலைமுறை.