பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. திருவாலங்காடு - కే ఫ్రా

பவவின நூறுங் காட்டிச் சுவமதி தானுஞ் சூட்டிப்

பசுபதி பாசங் காட்டிப் புலமாய்ப் படிமிசை போவென் ருேட்டி அடிமையை நீவந் தேத்திப்

பரகதி தானுங் காட்டி அருள்வாயே சிவமய ஞானங் கேட்கத் தவழுதி வோரும் பார்க்கத்

திருதடம் ஆடுங் கூத்திச் g@Gత డిణి திருவளர் மார்பன் போற்றத் திசைமுக குரும் போற்றச்

செகமொடு வானங் காக்க மயிலேறிக் குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கிக்

குதர்வடி வேலங் கோட்டுக் குமரேசர் குவலயம் யாவும் போற்றப் பழனயில் ஆலங் காட்டில்

குறமகள் பாதம் போற்று பெருமாளே.

-திருப்புகழ்,

நூறும் பொடி பட்டு அழிதல் ; சுவமதி - நல்லறிவு. ஏத்தி - வாழ்த்தி. புலம் - அறிவு. இதச் பிளக்கும். படிமிசை - உலகில், திருவளர் மார்பன் - திருமால் திரு . இலக்குமி. குவடு - கிரெளஞ்ச மலே, சூதம் - மாமரம், குறமகள் - வள்ளி நாயகி. வடி - கூர்மையான, குவலயம் - உலகம், பழனே - பழையனுர், மானும் பூட்டி - குதிரை பூட்டி. நான்கு மனம், புத்தி, சித்தம், அகங்காரம். புகல் - சொல்லப்படுகிற மதி - அறிவு. வழி - துவார்ம். நாலந்து - ஒன்பது. (கண்துளை இரண்டு, மூக்குத்துளை இரண்டு, ஒலித்துளே இரண்டு, சிறுநீர்த் துளை ஒன்று,. மலத்துனே ஒன்று. ஆக ஒன்பது துளைகள் மக்கள் சரீர்த்தில் உண்டு. இவை பெருந்துளே கள். சிறு துளைகள் ஆயிரக் கணக்கில் உண்டு.)