பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

16. திருப்பாசூர்

பாசு என்னும் சொல்லுக்கு மூங்கில் என்பது பொருள். இம் மூங்கில் இத் தலத்து விருட்சமாக் இருத்தலாலும், இம் மூங்கிலில் இத் தலத்து இறைவர் முளேத்த்மையாலும் இத் தலும் பாசூர் என்னும் பெயரைப் பெற்றது. மேலும், இவ்வூர் நீர்வளம் நிலவளம் காரணமாகப் பசும்ையோடு இருத் தலின் பாசூர் என்று பெயர் பெற்றது என்று கூறுத லும் உண்டு. இங்குள்ள இறைவரைச் சந்திரன் வழிபட்டு அருள் ப்ெற்றுள்ளான். இதனை அப்பர் பெருமான் இத் தலத்துத் திருக்குறுந்தொகை முதற்

செய்யுளில்,

முந்தி மூஎயில் எய்த முதல்வனர் சிந்திப் பார்வினை தீர்த்திடும் செல்வகுக் அந்திக் கோன்தனக் கே.அருள் செய்தவர் பந்திச் செஞ்சடைப் பா சூர் அடிகளே. என்று குறிப்பிடுதல் காண்க.

குறும்பர் அரசனுக்கும் கரிகால் சோழனுக்கும் பகை உண்டாயது. அந் நிலையில் சமணர்கள் குறும்பர் மன்னன் சார்பில் நின்று தமது மந்திர சத்தியால் பாம்பை உண்டாக்கிக் கரிகாலன் மீது ஏவினர். அதுபோது கரிகாலன் இறைவரிடம் முறையிடப் பாசூர் மேய பரஞ்சுடர் அப் பாம்பைத் தம் கையால் எடுத்து ஆட்டி அடக்கினர். இந்தக் குறிப்பையும் திருந்ாவுக்கரச்ர் இத்தல்த்தின் மீது பாடிய திருத்தாண்டகத்தில், நாலாவது பாடலில் “பட அரவு அது ஒன்று ஆட்டிப் பாசூர் மேய பஞ்சுடர்' என்று பர்டி அறிவித்துள்ளன்.

முனயில் - மூன்று கோட்டைகள். எய்த அம்பு செலுத்தி அழித்த அந்திக்கோன் - மாலயில் தோன்றும் சந்திரன். பந்தி - கற்றையான அடிகன் - இறைவர்.