பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1 . திருக்கச்சி ஏகம்பம்

5

தகைய திருவிழா திங்கட்கிழமையில் அமையு மானால், ஏகாம்பரநாதர் எக்காரணங் கொண்டும் காஞ்சியிலிருந்து புறப்படமாட்டார். ஞாயிற்றுக் கிழமை வந்து காட்சி அளித்துச் செல்வார். அவர் திங்கள் அன்று காஞ்சியிலிருந்து புறப்படாமைக்குக் காரணம், தம்மைத் திங்கட்கிழமை வந்து வழிபடு பவர்கள் ஏமாறாமல் இருப்பதற்கு என்க.


காஞ்சி ஏகாம்பரநாதர், கோவிலுக்குள் பல இலிங்கங்கள் உள்ளன. அவற்றுள் ஒர் இலிங்கம் மிகப் பெரியது. அவ்விலங்கத்தில் ஆயிரத்தெட்டுச் சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இதனையும் கண்டு களித்தல் வேண்டும். காஞ்சி ஏலவார் குழலி அம்மையின் திருக்கோயிலிற்கு அடுத்தாற்போல், அதாவது மாமரத்திற்குப் பக்கத்தே முருகனும் திருமூர்த்தி காட்சி அளிப்பார் . இதனேயே கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் 'காஞ்சி மாவடிவைகும் செவ்வேள் மலரடி போற்றி' என்று போற்றி வணங்கி யுள்ளனர்


ஏகாம்பரநாதர் கோவில் கோபுரம் மிகப் பெரியது அதன் மேல் உச்சிக்குச் சென்றால் சென்னைக்கலங்கரை விளக்கையும் (Light House) காணலாம். கோவிலின் நான்கு பக்கங்களிலும் கோபுரங்கள் உண்டு, தென்திசை கோபுரம் போல ஏனையவை பெரியன அல்ல. மதிலும் பெரியது. கோபுர வாயிலின் இருபக்கங்களிலும் பெரிய வடிவில் கணபதியும், முருகரும் எழுந்தருளி இருப்பதையும் கண்டு வணங்கலாம். கோவிலுக்கும் போகிற வழியில் மண்டபங்கள் உள்ளன. கோயிலின் பெரிய கோபுர வாயிலில் நுழைந்ததும் இனிமையான காற்று வீசுவதை நன்கு உணர்ந்து, வெயிலில் வந்த இளைப்பைப் போக்கிக் கொள்ளலாம். ஏனைய இடங் களில் காற்று இல்லாதிருப்பினும், இங்கு நிச்சயமாகக்