பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

காற்றைப் பெற்று இன்புறலாம். இதன் அருமையினைக் காளமேகப் புலவர்,

அப்பா குமரகோட் டக்கீரை செவ்விலிமேட்
டுப்பாகற் காய்பகுத் திக்குழிநீர்-செப்புவா
சற்காத்துக் கம்பத் தடியில் தவங்கருமா
றிப்பாய்ச்சல் யார்க்கும் இனிது ”

என்று புகழ்ந்து கூறுகின்றனர். காஞ்சியம்பதியிலே அமைந்துள்ள ஏனைய சிறப்புகளையும் இப்பாடலில் குறிப்பிட்டிருப்பதையும் உற்று நோக்குக.

கோபுர வாயிலைக் கடந்து சென்றதும், இடக்கைப் பக்கம் ஒரு குளம் இருக்கக் காணலாம், அதனேயே கம்பாநதி என்பர். அதற்குச் சிறிது துரத்தில் பங்குனி உத்திரத்தில் ஏகாம்பரநாதர்க்கு நடக்கும் திருக்கல்யாண மண்டப மெத்தையையும் பார்க்கலாம். இந்தக் கல்யாண மண்டபத்திற்குப் பின்னால் ஆயிரங்கால் மண்டபம் பழுதுபட்ட நிலையில் இருப்பதையம் நோக்கலாம்.

இம்மண்டபத்தில் விகட சக்கர விநாயகர் கோவில் உள்ளது, திருமால் தட்ச யாகத்தில் வீரபத்திரக் கடவுளின் வீராவேசத்தைக் கண்டு ஒடியபோது, தம் சக்கரத்தை மறந்து விட்டுச் சென்றார். அதனை வீரபத்திரர் பூண்டிருந்த தலை ஒன்று விழுங்கிவிட்டது. அதனைப் பெற்றுத் திருமாலுக்குத் தர, திருமாலின் சேனதிபதியான விடுவ சேனர் காஞ்சியை அடைந்து, சிவலிங்கத் தாபனம் செய்து பூசிக்க, வீரபத்திரர் தோன்றினர். அவரிடம் விடுவசேனர் தம் கருத்தைத் தெரிவிக்க அவர், "அஃது என்னிடம் இல்லை. அதனை என் தலை மாலையில் உள்ள ஒரு தலை விழுங்கிவிட்டது. அதனை எவ்வாறேனும் பெற்றுக்கொள்”என்று கூற, விடுவசேனர்