பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1.

திருக்கச்சி ஏகம்பம்

7

கோணங்கிக் கூத்து ஆடினர். (அதாவது காலிரண்டையும், கை இரண்டையும் வளைத்து, வாயையும் கண்களையும் நெரித்து அசைத்து, பற்கள் வெளித் தோன்ற ஆடும் விகடக் கூத்து) இக்கூத்தைக் கண்ட சக்கரத்தை விழுங்கிய தலை சிரித்ததும் சக்கரம் வெளியில் வந்து விழுந்தது. அதனை விநாயகர் விழுங்கி விட்டார். மீண்டும் விடுவசேனர் கோணக் கூத்து ஆடி விநாயகரைச் சிரிக்கவைத்த போது, அச்சக்கரம், வயிற்றிலிருந்து வாய் வழியே வந்து விழ, அதனே எடுத்துக் கொண்டு சென்று திருமாலுக்கு அளித்தனர். அவ்வாறு விகடக் கூத்தைக் கண்டு சக்கரத்தைக் கொடுத்ததனால் விநாயகர் விகடச்சக்கர விநாயகர் எனப்பட்டார்.

இந்த உண்மையினைக் காஞ்சிப் புராணம்,

'ஏக்கறவசன் அவன் இயற்றும் விகடநடம்

தெடும்போதெம் பெருமான் நோக்கி
மாக்கருணை சுரந்தருளி ஆழி அவன்

தனக்களித்தான் வரத்தால் மிக்கீர்
போக்கறும் இக் காரணத்தால் அன்றுமுதல்

காஞ்சியின் அப் புழைக்கைத் தேவை
ஊக்கமுறும் திறல்விகட சக்கர

விநாயகன் என் றுலகம் கூறும்

என்று கூறுகிறது. இவரையே காஞ்சிப்புராண ஆசிரியர் கச்சியப்பசிவாசாரியர் தம் நூலுக்குக் காப்புக் கடவுளாகக் கொண்டு விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்' என்று பாடி வணங்கியுள்ளார்,



ஏக்கறவான் . ஆசையால். மா - பெரிய, ஆழி - சக்கரம். போக்கு - குற்றம். புழை - சந்து. புழைக்கைத்தே - விநாயகர். திறல் - வன்மை,