பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

ஏகாம்பர நாதருக்கு நடக்கும் பங்குனி உத்திரத் திருமணத்தில் பல ஏழைகள் கல்யாண மண்டபத்திற்கு எதிரே தம்தம் திருமணத்தை முடித்துக் கொள்வர்.

கோவிலின் உள்புற மதிலைக் கடந்து சென்றதும் ஒரு குளம் காணப்படும். இது நீராழி மண்டபத்துடன் திகழ்கிறது. இது சிவகங்கை எனப்படும். சுவாமிக்கு மயானேஸ்வரர் என்பதும் பெயர். இவரைப் பண்டாசூரன் பூசிக்க இயற்றிய யாக குண்டமே இதுபோது இங்குச் சிவகங்கைக் குளமாக உளது என்பர்.

கோவில் கொடிமரத்திற்கு அருகே ஒரு சிறு கோவில் உளது. அது திருக்கச்சிமயானம் எனப்படும். அது பிரளய காலத்தில் (உலக முடிவில்) தேவர்களைச் சமிதை (சிறு சுள்ளி) யாகக் கொண்டு இறைவர் யாகம் செய்த தலமாகும். இது வைப்புத்தலம்.


காஞ்சிபுர ஏகாம்பரநாதர் கோவிலுக்குள் திருமால் உருவம் உளது. இஃது ஒரு சிறு கோவிலாக அமைந்துள்ளது. இதனை வைணவர்கள் நிலாத் திங்கள் துண்டம் என்பர். இத்திருமாலின் பெயர் நிலாத் திங்கள் துண்டத்தான் என்றும், பிராட்டியார் திருப்பெயர் நேர் ஒருவர் இல்லா வல்லி என்றும் கூறப் பெறும். மேற்குப் பார்த்த திருமேனி நின்ற கோலத்தில் பெருமாள் காட்சி அளிக்கின்றனர். இப்பெருமாளைத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளனர்.

நீரகத்தாய் தெடுவரையின் உச்சி மேலாய்

நிலத்திங்கள் துண்டத்தாய், நிறைந்தகச்சி

ஐதகத்தாய் ஒண்துறை நீர் வெஃகா உள்ளாய்
உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்


வரை.மலே உள்ளுவார்-நினைவார். ஏத்தும்.போற்றும். நீரகம், ஊரகம், வெஃகா என்பன திருமால் கோவில்கள்.