பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. திருவெண்பாக்கம் 1 4 3

இத்தலம் திருவள்ளுருக்கு (திருஎவ்வுள்ளுர்) ஏழு கல் தொலைவில் உளது. இதுபோது இத்தல முள்ள இடத்திற்குச் செல்லப் பஸ் வசதி உண்டு.

இத் தலத்திற்கு ஒன்றரை கல் தொலைவில் மற்றும் ஒரு சிவாலயம் உளது. அங்குள்ள இறைவர் கைகாட்டிய நாதர். இறைவியார் பரமேஸ்வரி.

இத் தலம் சுந்தரருடைய வரலாற்றுத் தொடர் புடையது. சுந்தரர் திருஒற்றியூர் வந்துற்றுச் சங்கிலியாரை மணந்தனர். மணக்கும்போது நான் திருஒற்றியூரை விட்டுப் பிரியேன்” என்று சத்தியம் செய்தனர். ஆனல் தமக்குத் திருவாரூர்த் தியாக ருடைய நினைவு வரவே, தம் சத்தியத்தைத் தவறித் திருஒற்றியூர் எல்லையைக் கடந்தனர். உடனே அவரது இரு கண்களின் பார்வை மறைந்தது. அதனுல் வருந்திப் புறப்பட்டுத் திருவெண்பாக்கம் வந்தனர். வந்து இறைவர் தமக்குத் தோழர் ஆதலின், அந்த உரிமையில் இறைவா என் கண்ணேக் கெடுத்தும் கோவிலில் இருக்கிருயா என்று விளு வினுர். இறைவர் சத்தியவான் ஆதலின், அவர் கேட்ட விவிைற்கு விடையாக உளோம் நீர் வந்த வழியே திரும்பிப் போம்” என்று கூறினர். ஆளுல் கோவிலில் ஒர் ஊன்று கோலை வைத்தருளினர். சுந்தரர் கண்ணேக் கெடுத்த தெய்வம் ஊன்று கோலேக் கொடுத்தது என்று எண்ணிக் கோபத் துடன் அதனை வீசி எறிந்தனர். அக் கொம்பு நந்தி யின் காதைச் சிதைத்தது. இந் நந்தி இவ்வாறு காதை இழந்து இதுபோதும் நீரில் மூழ்கி யுள்ளது. நந்தி தேவருக்கு அருகே சுந்தரர் ஊன்று கோலுடன் விளங்கும் உருவம் உளது. சுந்தரர், இறைவர் தமக்குக் கோல் கொடுத்ததையும், உளோம் போகீர் என்றதையும் வருத்தத்துடன், -