பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

17. திருவெண்பாக்கம்

இது பதிகத்தில் வெண்கோயில் என்று குறிக்கரு பட்டுள்ளது வெண்கோயில் இங்கு இருந்தாயேஜ: என்று சுந்தரர் தாம் பாடிய பதிகத்தில் குறிப்பிடு தலைக் காணவும். திருவுளம்பூதுார் என்றும் இத் தலத்தை மக்கள் கூறுவர். திருவிளம்பூர் என்றும் சொல்வதுண்டு, சுந்தரர் கோயில் உளாயோ?, என்று வருந்திக் கேட்டபோது இறைவர், 'உளோம் போகீர்' என்று கூறியதாகச் சுந்தரர் தம் பதிகத்தில் பாடுதலின், இத் தலம் திருவுளம்பூதுர் என்று கராணக் குறி ஆயதோ என்று எண்ணவேண்டி இருக்கிறது.

இத்தலத்து இறைவர் வெண்பாக்கநாதர், இற்ைவியார் கனிவாய்மொழி அம்மை. இங்குள்ள தீர்த்தம் கைலாய தீர்த்தம். இத்தலம் சுந்தரர் காலத்தில் இருந்த இடத்திலேயே இருந்தது. ஆல்ை, அரசாங்கத்தார் இத்தலத்தை ஏரிக்குள் மூழ்குமாறு செய்து விட்டனர். குடிநீர் வசதி செய்ய நீர்த் தேக்கம் அமைக்கப் பூண்டி ரிசர்வாயர் கட்டிய காலத்திலிருந்து இத்தலம் அந்த ரிசர்வாய்க் குள் மூழ்கிக் கிடக்கிறது. இத்தலத்திலிருந்து விக்கிரகங்களே அங்கிருந்து கொண்டு வந்து விட் டனர். அங்குள்ள நீரத் தேக்கத்தின் கரையினின்று பார்த்தால் கோவிலின் மதிலும் கோபுரமும் நீரில் மூழ்கிக் காட்சி தருவதைக் காணலாம்.

இறைவர் சுந்தரருக்கு ஊன்று கோல் அளித்த தல்ை ஊன்றீசர் என்றும் அழைக்கப் பெறுவர், இறைவியார், சுந்தரர் காஞ்சியம்பதி வரையில் செல்லும் அளவும், மின்னல் போலத் தோன்றி ஒளி காட்டிச் சென்றமையின் மின்னல் ஒளி அம்மை என்றும் கூறப் பெறுவர். இத்தலத்து விருட்சம் இலந்தை மரம்.