பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

18. திருக்கள்ளில்

இத்தலம் இதுபோது திருக்கள்ளும் என்று கூறப்படுகிறது. விருகு முனிவர்_பூசித்த தலம். இறைவர்.இவருக்குத் தட்சணாமூர்த்திவடிவில் காட்சி தந்தனர். இங்குள்ள இறைவர் சிவானந்தேஸ்வரர் என்றும், தேவியார் ஆனந்தவல்லி அம்மையார் என்றும் அழைக்கப் பெறுவர். இங்குள்ள தீர்த்தம் நந்தி தீர்த்தம் எனப்படும். -

இத்தலம் தின்னனுார் இரயில் அடியிலிருந்து பதின்மூன்று கல் தொலைவில் உளது. வழியில் குசஸ்தல ஆற்றைக் கடக்க வேண்டும். இவ் வாற்றின் வட கரையின் ஆறு கல் தொலைவில் பொன்னேரி ஸ்டேஷனிலிருந்து தென் மேற்குப் பன்னிரண்டு கல் கடந்தாலும் இத்தலத்தை அடை யலாம். சென்னையிலிருந்து புழலேரியை அடைந்து வடக்கே சென்று மூன்று கல் தொலைவில் உள்ள அத்திப்பேட்டுச் சத்திரத்தை அடைந்து அங்கிருந்து ஆறு கல் சென்ருலும் இக் கோயிலே அடையலாம். சென்னைத் தங்கசாலை சென்று பெரிய பாளையம் நாகலாபுரம் செல்லும் பஸ்ஸில் ஏறிக் கன்னிப் புத்துளரில் இறங்கி இரண்டு கல் சென்ருலும் இக் கோவிலே அடையலாம்.

இத் தலத்திற்குத் திருஞான சம்பந்தர் பாடிய பதிகம் ஒன்றே உளது. இப்பதிகம் கலிவிருத்தத்தால் ஆனது. பண் வியாழக்குறிஞ்சி. இதனைச் செளராஷ்டிர இராகம் போன்றது என்னலாம். இத் தலத்துப் பதிகம் இறைவரைப் பற்றிக் கூறுகையில் " நிறை பெற்ற அடியார்கள் நெஞ்சுளான்” என்று புகழ்கிறது. மேலும் மலயை தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே” என்றும் உணர்த்துகிறது.