பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. திருக்கள்ளில் 15ア

இத்தலத்து இறைவரை நினைத்தால் உயர்வு, அடைதல் உறுதி என்பது ' உள்ளுமேல் உயர் வெய்தல் ஒருதலையே' என்னும் வரி அறிவிக் கிறது. இத்தலத்து இறைவரைப் பெரியவர்கள் போற்றுவர் என்னும் கருத்து பெரியோர்கள் பரசுவாரே, பெரியான் என்று அறிவார்கள் பேசு வாரே " என்னும் தொடர்களால் தெரிய வருகிறது.

இத் தலத்தை வர்ணிக்கையில், பாலருவாயர், :முள்ளின்மேல் முதுகூகை முரலும் சோலே வெள்ளின் மேல் விடு கூறைக் கொடிவிளைந்த கள்ளில்’ * விரையாலும் மலராலும் விழுமை குன்ரு 'உரையாலும் எதிர்கொள்ள ஊரார் அம்மாக்

கரையாச்பொன் புனல்வேலிக் கள்ளில்’ கடியார்பூம் பொழில்சோலைக் கள்ளில்’’ :கருநீலம் மலர் விம்மு கள்ளில்’ மோச்செய்த வளவயல் மல்கு கள்ளில்’ என்று வர்ணித்துள்ளனர்.

இத் தலத்தை இறைவர் விரும்பி வாழ்வர் என்னும் குறிப்பு : “ கள்ளில் என்றும், பெருநீல மிடற்றண்ணல் பேணுவதே ' என்னும் வரியால் தெரிய வருகிறது.

மலன் - பாசங்கள். உள்ளுமேல் நினைத்தால், எய்தல். அடைதல். ஒருதலை . நிச்சயம் பரசுவர் - போற்றுவர். கூகை - கோட்டான். முரலும் - கத்தும் வெள்ளில் - விளாமரம். கூறை - ஆடை விரை வாசனை. விழுமை . பெருமை. உரை புகழ். பொன் - அழகிய, புனல் நீர். கடி - வாசனை, பொழில் சோலை. மிடறு கழுத்து. பேணுவது விரும்புவது. விம்மு - மலரும், மா - பெருமை.