பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 தொண்டைநாட்டுப் பாடலபெற்ற சிவதலங்கள்

கண்ணப்பர், நக்கீரர், சங்கம வேந்தன், சிவகோ சாரியார் முதலானேர் வழிபட்டுள்ளனர்.

இத்தலத்தின் அருகில் சுவர்ண்முகி என்னும் ஆறு ஓடுகிறது. இது வடக்கு நோக்கிச் செல்வது ஒரு சிறப்பாகும். இவ் வாற்றின் கீழ்க் கரையில் தான் இத்தலம் அமைந்துளது. இதனைப் பொன் முகரி ஆறு என்றும் சொல்வர். குளிக்க வசதியான ஆறு. இவ்வாற்றின் மீது ஒரு பாலம் உளது. அப் பாலத்தின் கீழ் இடம் ஆழமாக இருக்கும். இங்கும் குளிக்க வசதி உண்டு. பொன் முகரி ஆற்றிற்குப் போகும் வழியில்தான் கோவிலின் பெரிய கோபுரம் உளது. கோவிலுக்கும் இக் கோபுரத்திற்கும் தொடர் பில்லாதது போல அது காணப்படுகிறது.

இங்குச் சிவராத்திரி திருவிழா மிகச் சிறப் பானது. திருக்காளத்தி மலையினைச் சுற்றி வரப் பதினெட்டுக் கல் நடக்க வேண்டும். ஆனல், காளத்தி அப்பர் சிவராத்திரியின் போதும், மாட்டுப் பொங்கலின் போதும் மலையில் வாழும் மக்களுக்கும். ஏனைய உயிர் இனங்கட்கும் காட்சி அளிக்கச் சுற்றி வருவார். அதுபோது அன்பர்கள் ஆயாசம் இன்றிச் சுற்றி வரலாம். இங்கு வசந்த உற்சவம் சித்திரை வைகாசியில் மிக்க சிறப்புடன் நடக்கிறது. அது போது ஆற்றின் மணல் வெளியில் இறைவர் அன்பர் கட்குக் காட்சி கொடுக்கப் பந்தலில் அமர்ந்திருப்பர்.

இங்குப் பாதாள விக்னேஸ்வரர் இருக்கிருர், அவர் முப்பதடி ஆழத்தில் நில அறைக்குக் கீழ் உள்ளனர். உள்ளே போகப் படிகள் உண்டு.

இத் தலத்து இறைவர்க்குத் தும்பைப் பூச் சூடுவது விசேடமாகும். இக்கோவிலுக்குள் சென்று: மூலட்டான ஈசுவரரை வணங்கும்போது, அவர் பக்கலில் நிற்கும் திருக்கண்ணப்பரையும் கண்டு. வணங்கலாம். இறைவரைத் தரிசித்ததனுல் உண்