பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி 6

டாகும் பயன் கண்ணப்பரையும் உடன் தரிசப்பத ஞலேயே ஏற்படும் என்பதை உணர்ந்து பிராம்மண் குலச் சிரேஷ்டரான திருஞானசம்பந்தர், வேடர்குலத் திலகரான கண்ணப்பரை வணங்கினர். இதனைச் சேக்கிழார் தெள்ளத் தெளிய கும்பிட்ட்யூன் காண் பார்போல் மெய்வேடர் பெருமானக் கண்டு வீழ்ந்தார்” என்று எடுத்து விளம்பியுள்ளார். உன் பிராகாரத்தைச் சுற்றி வரும்போதும் மேடை மீது திருக்கண்ணப்பர் உருவம் கம்பீரத்துடன் காணப்படு கிறது. அதனையும் கண்டு தொழலாம். கோயிலைச் சுற்றிக்கொண்டு வெளியே வரும்போது மலையின் மேல் ஏற வழி செல்கிறது. அங்கும் சிவலிங்கமும், திருக்கண்ணப்பர் திருஉருவமும் உள்ளன. அவர் களையும் கண்டு மகிழ்ந்து வணங்கலாம். இங்குள்ள சிவலிங்கத்தையே கண்ணப்பர் வழிபட்டார் என்பர். கண்ணப்பர், மலைமீதுள்ள சிவலிங்கத்தையே வழி பட்டார் என்று பெரிய புராணம் கூறும் கூற்றுக்கு இது பொருத்தமாகும். ஆல்ை, இதுபோது பொன் முகரி ஆற்றங்கரையில் உள்ள கீழ்க்கோயில் இறை வரையே வழிபட்டனர் என்று கூறுவாரும் உளர். இக்கோவிலே பொன்முகரி ஆற்றில் நீராடிவிட்டு கோயிலை அடையச் சில படிகளே ஏறிக் கீழ்மலக்குச் செல்லவேண்டி இருத்தலின் இதுவும் ப்ொருத்திம்ா கும். ஆளுல்,மேல்மலையில் உள்ள இயற்கை நிலையை உற்றுநோக்கும்போது, அந்த இடமே கண்ணப்பர் பூசித்த இடம் என்பது மிகவும் பொருத்தமாகக் காணப்படுகிறது. மேலே அடர்ந்த காடும் ஒரு குளமும் உள்ளன. - . • ,

இறைவியார் ஞானப் பூங்கோதை என்னும் பெயருடன் விளங்குகின்றன்ர். இவ்வம்ம்ையா ருடைய திருப்பெயரை அப்பர் பெருமான் தம் திருத்தாண்டகத்துள் : ஞானப் பூங்கோதையாள் பாகத்தான்' என்று பாடியும் உள்ளனர். இவ்