பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! 80 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கன்

எதிர்எதிர வெதிர்பிணைய எழுபொறிகள்

சிதறாழில் ஏனம் உழுத கதிர்மணியின் வளர்ஒளிகள் இருள் அகல

நிலவுகா ளத்தி மலேயே’ "பல்பலஇ ருங்கனி பருங்கிமிக

உண்டவை நெருங்கி இனமாய்க் கல் அதிர நின்றுகரு மந்திவிளே

யாடுகா ளத்தி மலேயே’ :அலைகொள் புனல் அருவி.பல சுனைகள்வழி

இழியவயல் நிலவு முதுவேய் கலகலென ஒளிகொள் கதிர் முத்தம் அவை

சிந்துகா ளத்தி மலையே' 'ஊரும் அர வம் ஒளிகொள் மாமணி உமிழ்ந்தவை உலாவி வரலால் காரிருள் கடிந்து கன கம்என

விளங்குகா ளத்தி மலேயே’’ :புனவர் புன மயில் அனேய மாதரொடு

மைந்தரும் மணம்புன ரும்நாள் கனகமென மலர்கள்அணி வேங்கைகள்

நிலவுகா ளத்தி மலேயே’ :குன்றின்மலி துன்றுபொழில் நின்றகுளிர்

சந்திமுறி தின்று குலவிக் கன்றிளுெடு சென்றுபிடி நின்றுவிளே யாடுக ளத்தி மலேயே ’ என்று சிறப்பித்துள்ளனர்.

வெதிர் - மூங்கில்கள், பினேய சேர. பொறிகள் . தீப்பொறிகள். எழில் . அழகிய. ஏனம் - பன்றி. கதிர் வ ஒளியுடைய. பருங்கி - குடித்து. மந்தி - பெண் குரங்கு. வேய் = மூங்கில், கனகம் - பொன். புனவர் - வேடர். அனய போன்ற வேங்கை - வேங்கைமரம். (இதன் மலர் பொன்னிறமாதலின் கனகம் உவமை ஆயிற்று.) துன்றி நெருங்கி வளர்ந்த, சந்தமுறி - சந்தனத் தழை, பிடி - பெண்யானே.