பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. திருக்காளத்தி ; இ.இ

மெய்யவ னே திருவே

விளங்கும் திருக் காளத்தினன் ஐயதுன் தன்னை அல்லால்

அறிந் தேத்த மாட்டேனே'

கடியேன் காதன் மையால்

கழல்போற்றி யாதன என்னுள் குடியாக் கோயில் கொண்ட

குளிர்வார் சடை எம்குழகா”

என்னும் பாடல்களில் காண்க.

திருக்காளத்தி தேவர்களால் வணங்கப்படுவது என்பதை முடியால் வானவர்கள் முயங்கும் திருக் காளத்தி என்று கூறியிருப்பதல்ை அறிக. இயற்கை எழிலே கரிஆர் வண்டறையும் காளத்தி என்றும், காரூறும் பொழில்சூழ் காளத்தி என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளனர். காளத்தியில் மாளிகைகள் நிறைந் திருந்தன என்பதை, கடைஆர் மாளிகைசூழ் காளத்தி என்று கூறுவதிலிருந்து அறியலாம்.

ஈற்றுப் பாடலில் செந்தமிழ்ப் பாடலாம் இப் பதிகத்தைப் பாடுவார், விண்ணுலகம் பெறுவர்? என்பதும், தப்புத் தவறுகள் எதுவும் பொருந்தப் பெருர்’ என்பதும், சுந்தரர் அணிநாவல் ஆரூரர்? என்பதும் சொல்லப்பட்டுள்ளன.

கழல்போது-திருவடிமலர். களிஆர்-மகிழ்ச்சி நிறைந்த, அறையும்-ஒலிக்கும். கார்-மேகம். கடைஆர் . வாயில்கள் நிறைந்த,