பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

'மறிசேர் கையினனே மதமா உரி போர்த் தவனே குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன் நெறியே நின் னடியார் நினைக்கும் திருக் காளத்தியுள் அறிவே உன்னே அல்லால் அறிந் தேத்த மாட்டேனே"

-ஏழாம் திருமுறை.

இத்தலத்து முருகன் மீது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் மூன்று. அவற்றுள் ஒன்று,

சிரத்தா னத்திற் பணியாதே.

செகத்தோர் பற்றைக் குறியாதே; வருத்தா மற்ருெப் பிலதான. மலர்த்தாள் வைத்தெந் தனையாள்வாய்; நிருத்தா கர்த்தத் துவதேசாநினைத்தார் சித்தத் துறைவோனே; திருத்தாள் முத்தரீக் கருள் வோனே. திருக்கா ளத்திப் பெருமாளே.

மறி - மான், மதமா - யானே. உரி - தோல்,

செகத்தோர் . உலகத்திலுள்ளவர்கள். உறைவோனே. வாழ்பவனே. சிரத்தானத்தில் தலைமேல். முத்தர் ஜீவன் மூத்தர்.