பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

பட்டதை வைணவர்கள் பயன்படுத்தக் கூடாது என்பதற்காக என்பர்.

வரதராசப் பெருமான் தம் வைகாசி உற்சவத் தில் ஆரும் நாளும், எட்டாம் நாளும் யானே மீதும், குதிர்ை மீதும் புறப்பட்டு, ஏகாம்பரநாதர், கோவி லின் முன்பு வந்து யானையின் பின் பக்கத்தையும், குதிரையின் பின் பக்கத்தையும் காட்டிக் காட்டி முன்னும் பின்னும் போய் வருவர். இதனை ஏசல் விழா என்பர். ஏகாம்பரநாதருக்குத் திருமால் தமது தங்கையான பார்வதியை மணம் செய்து கொடுத் துள்ளார். அதனுல் ஏகாம்பரநாதர் வரதருக்கு மைத் துனர் ஆயினர். அந்த மைத்துனருக்கு ஏசல் காட் டுவது போல இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியின் போது ஏகாம்பரநாதர் கோயில் குருக் கள் வரதருக்குத் தீபாராதனை முதலான உபசாரங் களேச் செய்வர். அப்படிச் செய்தவற்றை அவர்கள் பயன் படுத்துவர்.

காமாட்சியம்மையாரின் திருக்கல்யாணத்திற்குப் பிறகு கோ தரிசனம் (பசுக் காட்சி) நடைபெறும். அதனையும் கண்டு களிக்கலாம். பங்குனி உற்சவம் (திருவிழா) முடிந்த பின்பு, அவ் விழாவில் அர்ச்சக ராய் இருந்தவர் கையில் மஞ்சள் கயிறு (காப்பு) அணிந்து விழா முடிகின்ற வரையில் விரதம் காத்து ஒழுகுவர். விழா முடிந்த பிறகு அவ்வர்ச்சகரை அலங்கரித்துப் பல்லக்கில் ஏற்றி மாடவீதி வலம் வரச்செய்வர். இது பட்டணப் பிரவேசம் எனப்படும். இங்குச் சர்வதீர்த்தக் குளம் என்னும் பெயரில் ஒரு பெரிய குளம் உளது. இது நீராட வசதியானது. காஞ்சியிலுள்ள இறைவரைப் பிரம்ம, விஷ்ணு, குத்திரர், பூசித்துள்ளனர். இவ்வாறு பூசிக்கப்பட்ட இலிங்கங்கள் வெள்ளைக் கம்பன், கள்ளக் கம்பன், நல்லகம்பன் எனப்படும். இவ்விலிங்கங்களைச் சுந்தரர்