பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் f :

இத்தலத்துப் பதிகத்தில் குறிப்பிட்டுள்ளனர். இறைவி யார் மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்டுத் தழு விய காரணத்தால் தழுவக் குழைந்த கம்பர் என்னும் பெயரும் ஏகாம்பரநாதருக்கு உண்டு. மூலத்தானப் பெருமான் மணல் மூர்த்தி ஆதலின் அவருக்கு அபிடேகம் இல்லை. புனுகு சட்டம் மட்டும் சாத் தப்பெறும். ஆவுடையார்க்கு மட்டும் அபிடேகம் நடைபெறும். சிவலிங்கத்திற்குப் பின்புறம் இறை. வியும் இறைவனும் மணக் கோலத்துடன் காட்சி அளிப்பதைக் காணலாம்.

காஞ்சிபுரம் முதன்மையான சத்தி பீடத்தல மாகும். சத்தியாவாள் ஈண்டுக் காமாட்சி அம்மை யார். இவ்வம்மையார்க்கு ஊர் நடுவே ஒரு கோவில் உளது. இதனைக் காமக்கோட்டம் என்பர். இதுவும் பெரிய கோவில். கோவிலுக்குள் பெரிய குளமும் உளது. யாத்திரிகர்கள் தங்கிச் சமையல் செய்யக் குளத்தைச் சுற்றிப் பல அறைகள் போன்ற அமைப்பு கள் உள்ளன. குளம் வழுக்கல் மிக உடையது. இக் கோவிலில் கள்வனுர் எனும் திருமால் கோவில் உள்து,

காமாட்சி அம்மையார் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிப்பார். வெள்ளிக்கிழமை இவ்வம்மையார் தரிசனம் மிக்க விசேடம் ஆகும். அன்னபூர்ணி அம்பிகையின் உருவத்தையும் இங்குக் கண்டு வணங்கலாம். சங்கராசாரியர் திருவுருவமும் இங்கு. வழிபடுதற்கு உரியது. ஒரு காலத்தில் அம்பிக்ை உக்கிரம் கொண்டு இருந்தமையின், சங்கராசாரியர் மந்திரத் தாபனம் செய்து அம்பிகையைச் சாந்த முறச் செய்தனராம். உற்சவ அம்பிகையார் வலப் பக்கமும், இடப்பக்கமும் அலைமகளையும் (இலக்குமி யையும்) கலைமகளையும் (சரஸ்வதியையும்)கொண்டு திகழ்வதைக் காணலாம். கா என்னும் சொல் சரசு