பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வதியையும், மா என்னும் சொல் இலக்குமியையும் குறிக்கும். இது குறித்தே தேவியார் காமாட்சி எனப் பட்டனர். கர்+ம்ா+ அட்சி என்னும் சொற்கள்

காமாட்சி என்று ஆயது. அட்சி என்பது கண்

ஆகும். இந்த உண்மையைத் திருவிளையாடற் புரா ணத்தில் பரஞ்சோதியார்,

திருமகள் வயக்கண் வாக்கின் சேய் இழை

இடக்கண் ஞானப் பெருமகள் நுதற்கண் ஆகப் பெறறுவான

செல்வம் கல்வி அருமை.வீ டளிப்பாள் யாவள் அவன் உயிர்த்

துணைவன் காண - ஒருமுலை மறைந்து நாணி ஒசிந்தபூங்

கொம்பில் நின்ருள்' - என்றும், பெரியநாயகி அம்மைக் கலித்துறையில் சிவப்பிரகாச சுவாமிகள், 1.தண்ணுர் இதழி புனேவாள் விழிஇ8ண தம்மனைகள் பண்ணு அழிக்கும் என் ருேநின் திருமுகப் பங்கயத்தில் கண்ணு யினர் உனக் கவ் அலை மாதும் கலைமகளும் பெண்ணுச் அமுதனே யாய்குன்றை வாழும் பெரியம்மையே’

என்றும் பாடிப் போற்றினர்.

காமாட்சி அம்மையார் கோவிலுக்கு அடுத்தாற் போல் முருகன் கோவில் உளது. இங்குப் பூசை செய்துவந்த கச்சியப்ப சிவாசாரியாரே கந்தபுரா

வாக்கின் சேய் இழை - சரசுவதி. ஞானப் பெருமகள் . ஞானசக்தி, நுதல் - நெற்றி ஒசிந்த - துவண்ட. இதழி - கொன்றைப் பூ. அலேமாது - இலக்குமி. இதழி - கொன் றைப் பூ. புனேவான்- சூடிய சிவபெருமான். பங்கயம் - தாமரை,