பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 6 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

வரர் ஆலயங்கள் என்பன. சந்நிதி வீதியில் அகத் தீஸ்வரர் கோவிலும் உண்டு. இங்குள்ள இறைவர் அகத்தீஸ்வரர். தேவியார் அகிலாண்டேஸ்வரி. இக் கோவிலுக்குள் இரண்டு சுரங்க அறைகள்

இருப்பனவாகக் கூறுவர். - * . -

இத் தலம் திருஒற்றியூர் ஸ்டேஷனிலிருந்து கிழக்கே அரை கல் தொலைவில் உள்ளது. சென்னைத் தங்கசாலையிலிருந்து பஸ் வண்டிகள் மிகுதியும் போகின்றன. சென்னையிலிருந்து வடக்கே ஐந்து கல் தொலைவில் இத் தலம் உளது.

திருவொற்றியூர் ஆலயத்திற்குக் கிழக்கே கடற். கரையில் பட்டினத்தார் கோவிலும், இராமலிங்க சுவாமிகள் மடமும் உள்ளன. - -

திருஒற்றியூர்க் கோவில் கல்வெட்டுகளினல் நாம் அறிவன :

படம்பக்கநாதர் கோவில் வீர ராஜேந்திரளுல் கட்டப்பட்டது. இங்கு வியாகரண மண்டபம் ஒன்று இருந்து இலக்கணப் ೬JL-h நடத்தப்பட்டது. இதனுல் இவ்வூர் இறைவர் வியாக்கர்ணதானப் பெருமான் எனனும் பெயரையும் பெற்றனர். குலோத்துங்கன் இங்கு நடந்த ஆனி விழாவைத் தரிசித்துள்ளான். அவன் இராசராசன் மண்டபத்தில் தங்கி இருந்தனன். இவ்வூர்த் தியாகர் கருணை விடங்கள் என்னும் பெயரையும் பெற்றிருந்தனர். இங்குச் சூரியனுக்கும் ஒரு தனிக்கோவில் இருந்தது. இங்குள்ள பிள்ளையார் அனுக்குப் பிள்ளையார் என அழைக்கப்பட்டனர். வாக்குவாதம் நடத்த வாக் கணிக்கும் மண்டபம் ஒன்று. இருந்ததையும் அறிகி ருேம். இக் கோவிலில் பணிபுரியும் ஆட்கள் நூற்று முப்பத்தொன்பது பேர்கள் இருந்தனர். ஆதொண் டைச் சக்கரவர்த்தி புழல்கோட்டத்தை வென்ற