பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்பூர்றி 1 97

போது, அங்கிருந்து இரண்டு பவழத் தூண்களேயும், இரண்டு வெண்கலத் துரண்களையும் கொணர்ந்து கோயிலுக்குத் தானமாக அளித்தனன். ஆணுல் அவை இதுபோது இல்லை. அவற்றைக் கடல் கொண்டுவிட்டது என்பர்.

இறைவர் திருப்பெயர்கள் மகாதேவபட்டர், திருஒற்றியூர் மகாதேவர், ஒற்றியூர் ஆழ்வார், திருஒற்றியூர் உடைய நாயனுர், படம்பக்க நாயக தேவர் என்று அறிய வருகின்றன.

இத் தலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவும், ஆணித் திருவிழாவும், மாசிப் பெருவிழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. இதுபோது மாசி மாதம் நடைபெறும் மகிழ மரத்தடி சேவை கல்வெட் டில் பங்குனிமாதம் நடத்தப்பட்ட விழாவில் ஆரும் நாள் நடத்தப்பட்டதாக அறியவருகின்றது. அவ் விழாவில் படம்பக்கநாதரை ஆண்டு எழுந்தருளப் பண்ணிச் சுந்தரர் புராணம் வாசிக்கப்பட்டது.

குலோத்துங்கசோழ மண்டபத்தில் தாள்தோறும் ஐம்பது அடியார்களுக்கு அன்னம் அளிக்கப்பட்டது. இதற்காக முதல் குலோத்துங்கன் பனப்பாக்கம் என்னும் ஊரை எழுத்தறிவார் நல்லூர் என்று பெயரிட்டு, அதில் ஒரு பகுதியை நிவந்தமாக அளித் தனன். -

திருஒற்றியூர் வியாக்கரணதான வியாக்கியான மண்டபம் சித்தரசன் பொருட்டுத் துர்க்கையாண்டி நாயகனுல் கட்டப்பட்டது. மண்ணேக் கொண்ட சோழன் மண்டபம் கோயில் சம்பந்தமான வழக்கு விசாரிக்கப் பயன் பட்டது.

சதுரானன பண்டிதர்க்கு ஒரு மடம் இருந்தது. அதற்குத் திருமயான மடம் என்றும் பெயரும் உண்டு. இராஜேந்திரமடம் ஆசியதேசத்து மேகலா