பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

புரத்துப் பிராமண அம்மையாரால் கட்டப்பட்டது. அங்கராயன் மடம் ஒன்று இருந்ததாகவும் அறிதி ருேம். கோயிலின் வெளிப் பிராகாரத்து மதிலக் கட்டியவர் சேதிராய தேவர்.

இங்கு அளக்கும் கருவியின் பெயர் அருமொழித் தேவன் நாழி எனப்பட்டது. இதுகொண்டு நெய், நெல் முதலியன அளக்கப்பட்டன.

இறைவர் திருப்பெயரான படம்பக்க நாதன் என்பது கோயில் நாயகம் செய்துவந்த ஒருவனுக்குப் படம்பக்க நாயகபட்டன் என்று இடப்பட்டது. திரு. புவன சுந்தரத் தெரு மன்ருடிகளில் ஒருவனுக்கும் படம்பக்கன் என்று இடப்பட்டது. எழுத்தறிவார் நல்லூர் என்னும் பெயர் பனம்பாக்கத்திற்கு வைக்கப் பட்டது. மணலி என்னும் ஊரினர் ஒற்றியூருக்கு உப்புத் தட்டுத் தானம் செய்தனர். அதற்குப் படம் பக்க நாயகப் பேரளம் என்னும் பெயர் சூட்டப் பட்டது.

கிரந்த கல்வெட்டுகள் திருஒற்றியூரை ஆதிபுரி என்றும், இறைவரை ஆதிபுரீஸ்வரர் என்றும் கூறு கின்றன.

இத் தலத்தில் கைலாயத்திலிருந்துப் பூலோகத் தில் வந்து பிறந்த அநிந்திதை, கமலினி என்னும் இருவருள் அநிந்திதை என்னும் அம்மையார், ஞாயிறு கிழார்க்குத் திருமகளாராகத் தோன்றி யருளி, ஒற்றியூர்ப் பெருமானுக்கு மலர் பறித்து மாலையாகக் கட்டி அணியும் தொண்டினே மேற்கொண்டிருந் தனர்,

இவ்வம்மையாரை இத்தலத்து இறைவரைக் கண்டு வணங்க வந்த சுந்தரர் பார்த்து அவரை மணக்க விரும்பினர். அவ்விருப்பத்தை நிறைவேற்றி வைக்க இறைவரிடம் விண்ணப்பித்துக் கொண் டனர். அவ்வாறே செய்துவைக்க இறைவர்