பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 1 99

திருவுளம்பற்றிச் சங்கிலியாருடைய கனவில் சுந்தரர் பெருமைகளைக் கூறி மணக்குமாறு தூண்டினர். அவ்வம்மையார் சுந்தரர் தம்மைவிட்டுப் பிரிவதில்லை என்று மகிழமரத்தடியில் சத்தியம் செய்வாராயின் மணப்பதாகக்கூற, அப்படியே சுந்தரர் சத்தியம் செய் தனர். ஆல்ை சுந்தரர் தம் வாக்கைத் தவறித் திரு ஒற்றியூர் எல்லேயைத் தாண்டிக் காலடி வைத்ததும், (சுந்தரர் திருஒற்றியூரைத் தாண்டிக் கால் தைத்த இடமே இதுபோது, காலடிப்பேட்டை என வழங்கப் பட்டு வருகின்றது. இங்கு ஒரு விஷ்ணு ஆலயமும் உளது. வைகாசி கருடசேவை விசேடமானது) கண்பார்வை மங்கியது. உடனே சுந்தரர் திரும்பி வந்து திருஒற்றியூர்த் தியாகர் முன்நின்று உருகிப் பாடினர். -

சுந்தரர் இங்குப் பாடிய பதிகத்தில் தம் கண் இழந்தது குறித்துப் புரடி இருப்பது கல்லான உள்ளத் தையும் கரைக்கவல்லதாகும். அவ்வாறு அவர் பாடி வருந்தியதைக் கீழ்வரும் வரிகளில் காண்க.

'ஒழுக்கஎன் கணுக்கொரு மருந்துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே’’ "மூன்று கண்ணுடை யாய் அடி யேன்கண்

கொள்வதே கணக்குவழக் காகில் ஊன்று கோல்எனக் காவதொன் றருளாய்

ஒற்றி யூர் எனும் ஊர் உறை வானே' 'கழித் தப்ேபட்ட நசயதுபோல

ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்

ஒற்றி ஊர் எனும் ஊர் உறை வானே’’ * உற்ற நோய்உறுபிணி தவிர்த் தருளாய்

ஒற்றி ஊர் எனும் ஊர் உறை வானே' கழித்தலே - கே லில் கட்டிவைக்கப்பட்ட உறுபிணிஉள்ளநோய்,