பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 2{}蟹

இனய் வாங்கப் பொருள் இல்லை என்ருலும், மனம் தளராமல் கோவிலுக்குள் சென்ருர். அகல்களுக்கு வத்தி இட்டனர். எண்ணெய்க்குப்பதிலாகத் தம்மை அறுத்து அதன் வழியே வரும் இரத்தத்தை ஊற்றி விளக்கெரிக்கக் கத்திகொண்டு அறுத்துக் கொண்ட னர். இந்நிலையில் இறைவர் அவர் முன்தோன்றிக் காட்சி தந்தனர். அறுப்புண்ட இடமும் மறைந்தது. குருதியும் நின்றது. இறைவர் அவருக்குத் திருவருள் செய்தனர். . . -

பட்டினத்தார் தமக்கு முத்தி தரும் தலம் எது என்று இறைவரைக் கேட்டபோது, அவருக்கு ஒரு பேய்க் கரும்பைத் தந்து இக் கரும்பு எத்தலத்தில் இனிக்கிறதோ, அத்தலமே உனக்கு முத்திதரும் தலம் என்று திருவருள் புரிந்தனர். அவ்வாறே -பட்டினத்தடிகள் பேய்க்கரும்புடன் இத் தலத்திற்கு வந்து அக் கரும்பைச் சுவைத்தபோது அஃது இனிக்கக் கண்டனர். இதனை அவரே,

கேண்டம் கரியதாம் கண்மூன்றுடையதாம் அண்டத்தைப் போல அழகியதாம்-தொண்டர் உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக் கடலருகே நிற்கும் கரும்பு' என்று பாடி இருக்கின்றனர்.

இத்தலம் அவருக்குச் சிவமயமாகக் காட்சி அளித்ததையும்,

'வாவிஎலசம் தீர்த்தம் மணல்எலாம் வெண்ணிலு: காவனங்கள் எல்லாம் கனநாதர்-பூவுலகில் ஈது சிவலோகம் என்றென்றே மெய்த்தவத்தோர் ஒதும் திருஒறிறி யூர்' என்று பாடி அறிவித்துள்ளனர்.

கண்டம் - கழுத்து கரும்பு - கரும்புபோல் இனிக்கும் சிவபெருமான் , வசவி - குளம் காவணம் - சோலைகள், தோப்பு, மண்டபம்.