பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இராமலிங்கசுவாமிகள் பசியில்ை வருந்தி உறங். கிக்கொண்டிருக்கும்போது வடிவுடை அம்மையார் அவரை எழுப்பிச் சோறு அளித்துத் திருவருள் புரிந் தனர் என்பது தெரிகிறது. இதனை அவரே,

அன்ருெருநாள் நம்பசிகண் டந்தோ தரியாது

நன்றிரவில் சோறளித்த நற்ருய்காண்” என்று பாடி அறிவித்துள்ளனர்.

இத் தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் திருநேரிசைப் பதிகங்கள் இரண்டும், திருவிருத்தப் பதிகம் ஒன்றும், திருக்குறுந் , தொகைப்பதிகம் ஒன்றும், திருத்தாண்டகம் ஒன்றும் ஆக ஐந்தும், சுந்தரர் பாடிய பதிகங்கள் இரண்டும் சேர்ந்து எட்டுப் பதிகங்கள் உள்ளன.

திருஞானசம்பந்தர் பதிகம் தரவு கொச்சகம், இதன் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. பண் காந்தாரப் பஞ்சமம். இதனை இக்காலத்தில் கேதார கெளளத்தில் பாடுகின்றனர். திருநேரிசைப் பற்றி யும், திருவிருத்தம் பற்றியும், திருக்குறுந்தொகை பற்றியும், திருத்தாண்டகம் பற்றியும் முன்பே கூறப் பட்டன. ஆண்டுக் காண்க. சுந்தரரின் முதல் பதிகம் எண்சீர் விருத்தம். ஓர் அடியில் எட்டுச் சீர்கள் வருவது எண்சீர் விருத்தம். இதன் பண் தக்கேசி. இதனைக் காம்போதி என ஒருவாறு கூறுவர். இரண்டாவது பதிகம் கலிவிருத்தத்தால் ஆனது. இதன் பண் குறிஞ்சி. இதன் சாயல் அரிகாம்போதி போல இருக்கிறது என்பர். -

திருஞானசம்பந்தர் பதிகத்தில் இறைவர், "விண் னும் தொழநின்றவன், ஊனம் இல்லி, அரன் ஆகிய ஆதிமூர்த்தி, பரவுவார் (போற்றுவார்)பாவம் எல்லாம் பறைத்து (ஒட்டி) ஆளும் பெம்மான், விலகினர். வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்லபலகினர்