பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. திருஒற்றியூர் 203,

(பாவத்தினின்றும் விலகியவர்கட்கு அருள் செய்: பவன்) அலகினுல் விசி நீர் கொண்டு அடிமேல் அலர் இட்டு முட்டாது உலகினர் ஏத்த நின்ருன், கமை யொடு (பொறுமை) நின்ற சீரான், பெற்றியால் பித்தன் ஒப்பான், திகழ் சேவடி சிந்தை செய்து, பரவினர் பாவம் எல்லாம் பறைய (நீங்க) படர்பேர் ஒளியொடு ஒருவனுய் நின்ற பெம்மான்' என்று புகழப் பட்டுள்ளார். - -

இறைவர்க்கு உலகில் யாவரும் நன்றியுடனும், நன்மையுடனும் வாழ வேண்டும் என்னும் திரு. உள்ளம் உண்டு என்பதை 'நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஆரும் நன்மையாலே' என்னும் வரியால் உணர்த்தி யிருப்பதைக் காணலாம்.

இப் பதிகத்துப் பத்தாவது பாடல் உபதேச முறையில் அமைந்துள்ளது. அப்பாடல்,

தோகைஅம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள்

போர்த்துழல்வார் ஆகமச் செல்வகுரை அலர்துசற்றுதல்

காரணமாக் கூகை அம் மாக்கள் சொல்லைக் குறிக்கொள்ளன்மின்

ஏழுலகும் ஒகைதந் தாளவல்லான் உறையும் இடம்

ஒற்றியூரே' என்பது.

தோகை - மயில், பீலி - இறகு, துவக்கூறை , செவ் வாடை, அலர் தூற்றுதல் - பழிச்சொல் கூறுதல், கூகையம் மாக்கள் - கோட்டான்களைப் போன்றவர், (சமணர்) விலங்குத் தன்மை வாய்ந்த மக்கள், ஒகை - மகிழ்ச்சி, விண் - தேவர்கள், ஊனம் - குற்றம், பறைத்து - ஒட்டி, பரவிகுச் . போற்றி வழிபட்டவர்கள். பெற்றி - தன்மை. அலகினுல் - தாளத்தோடு.