பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இறைவரது பிறைச்சந்திரன் இறைவர் யானே யைக் கொன்றபோது இற்று வீழ்ந்த கொம்புபோலும், அதனைப் பாம்பு சுற்றிக்கொண்டிருப்பது, கொம்புக்குப் பூண் இட்டது போலும், நெற்றிக்கண் யானைக் கொம்பில் தோன்றும் முத்துப் போலும் இருப்ப, தாகக் கருதி, . . . . .

செற்றுக் களிற்றுரி கொள்கின்ற ஞான்று செருவெண்

(கொம்பொன் றிற்றுக் கிடந்தது போலும் இளம்பிறை பாம்பதனைச் சுற்றிக் கிடந்தது கிம்புரி போலச் சுடர் இமைக்கும் நெற்றிக்கண் மற்றதன் முத் தொக்கு மால்ஒற்றி ஊரனுக்கே’’ என்று ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.

இறைவர் தம்மை ஆட்கொண்டதை வியந்து 'என் சிந்தை பிரிவரியான்' என்றும், அடியேனே பிறப்பறுத்தாள வல்லான்' என்றும் பாடியுள்ளனர். 'இறைவரை நஞ்சு உண்ணுமாறு செய்துவிட்டார் களே தேவர்களும் அசுரர்களும். ஆ! இதற்கு என் செய்வேன்’ என்று எண்ணி வருந்துவார் போல, *நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்தநஞ் சைப் பருக்கினவா றென்செய்கேன்' என்று பாடித் தம் ஆற்ருமையை அறிவித்துள்ளனர்.

வினே தம்மை ஒன்று செய்ய இயலாது என்பதனே,

சுற்றிக் கிடந்தொற்றி யூரன் என் சிந்தை பிரிவறிவான் ஒற்றித் திரிதந்து நீஎன்ன செய்தி உலகமெல்லாம் பற்றித் திரிதந்து பல்லொடு நாம் என்று கண்குழித்துத் தெற்றித் திருப்பதல் லால்என்ன செய்யும் இத் தீவினையே’ என்னும் பாடலில் பாடி உணர்த்தி உள்ளதைக் 芯顶、

செற்று-கொன்று, களிற்றுரி-யானைத்தோல், ஞான்றுஅந்தநாளில், இற்று. ஒடிந்து, கிம்புரி-பூண், தெற்றித்துமாறுபட்டு,