பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

20. திருஒற்றியூர் 2 :

உபதேச முறையில் அமைந்த பாடல், வேலைக் கடல் நஞ்சும் உண்டுவெள் ளேற்ருெடும்

(வீற்றிருந்த மாலைச் சடையார்க் குறைவிடம் ஆவது வாசிகுன்ரு ஆலேக் கரும்பொடு செந்நெற் கழனி அருகணேந்த சோலேத் திருஒற்றி யூரைளப் போதும் தொழுமின்களே. என்பது.

இறைவரிடம் எப்பொருள் சேரினும் பகையின்றி வாழும் என்னும் அரிய குறிப்பு, இத்தலத்து முதல் குறுந்தொகைவழி அறியவருகின்றது. அதாவது பாம்பு சந்திரனைப்பற்றி அதன் ஒளியை மங்கச் செய்யும். ஆணுல், இறைவர் தலையில் உள்ள பாம்பும் சந்திரனும் ஊர்ந்துகொண்டு இருந்தனவே அன்றிப் பாம்பு சந்திரனைப் பற்றிலது. இதனை அப்பர்,

ஒற்றி ஊரும் ஒளிமதி பாம்பினே - ஒற்றி ஊரும் அப் பாம்பும் அதனேயே ஒற்றி ஊர ஒருசடை வைத்தவன் ஒற்றி ஊர் தொழி நம் வினே ஒ:புமே. என்று பாடி உணர்த்தியுள்ளனர். ஈற்றடி திருஒற்றி யூரைத் தொழுதால் நம் வினை நீங்கும் என்னும் அறவுரையினே உணர்த்துகிறது.

இறைவி, தம் கணவர் சுடலையில் இருளில் மண்டை ஒட்டை ஏந்தி ஆடுகின்ருரே என்று வருந்துவாளாம். இத,ை

வாட்டம் ஒன்று ரைக்கும் மலேமகள் ஈட்ட வே இருள் ஆடிஇ டுயினக் காட்டில் ஒரி கடிக்க எடுத்தோர் ஒட்டை வெண்தலேக் கைஒற்றி ஊரசரே.

என்று அறிவித்துள்ளனர்.

மதி . சந்திரன். வேலே , கரை. ஏறு - எருது. வாரி . வளம், வருவாய். ஒற்றி - பொருந்தி. ஒயும் . நீங்கும். வினே - தீவினை, ஈட்ட - நெருக்க. ஒரி - நரி.