பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

மூன்ருவது பாட்டில் இறைவரைப் பலவாறு விளித்து என் குறையை யார் இடத்துக் கூறு வேன்? என்கிருர். இதனை,

  • கங்கை தங்கிய சடையுடைக் கரும்பே

கட்டி யேபலர்க் கும்களே கண்ணே அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே

அத்த என்இடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல

வயிரம் முத்தொடு பொன்மணி வரன்றி ஓங்கு மாகடல் ஒதம்வத் துலவும்

ஒற்றி ஊர் எனும் ஊர் உறை வசனே.” எனும் பாடலில் காண்க.

நான்காவது பாட்டில் 'என்னைப்பெற்ற காரணத் தால், தாய்தான் சுற்றம் என்று கொள்ளேன். எல் லோரும் அன்புடையவர்களே. எனக்கு நீங்கள் அருள் செய்து விட்டால் என்னை முன் இகழ்ந்து சொன்னவர் களே நீங்களும் இகழ்ந்து பேசமாட்டீர்கள். உமக்கோ மூன்று கண்கள் உண்டு. அவையும் போதா என்று என் கண்களையும் கொண்டீர்களே! சரி. ஊன்றுகோலே யாகிலும் கொடுப்பீராக’ என்று வேண்டுகின்ருர்.

ஈன்று கொண்டதோர் சுற்றம்ஒன் றன்ருல் யாவர் ஆகில் என் அன்புடை யார்கள் தோன்ற நின்றருள் செய்தளித் திட்டால்

சொல்லு வாரை அல் லாதன சொல்லாய் மூன்று கண்ணுடை யாய் அடி யேன்கண் கோள்வ கேகனக் கு வ்வழக் காகில் ஊன்று கொல்எனக் காவதொன் றருளாய் ஒற்றி யூர்.எனும் ஊர் உறை வானே'. என்பது அவ்வேண்டுகோள் பாடல்.

களே கண்ணே - பற்றுக்கோடாய் இருப்பவனே. அங்கை நெல்லியின் பழம் என்பது, உள்ளங்கை, நெல்லிக்கனி என்னும் பழமொழியாகும். அங்கை - அகம் + கை, உள்ளங்கை. அத்த தந்தையே. சிப்பி - கிளிஞ்சல். சலஞ்சவம் . இது ஒருவகை சங்கு. முரல ஒலிக்க, வரன்றி-வாரிக்கொண்டு,