பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. திருஒற்றியூர் 2.2%

ஐந்தாவது பாட்டிலும் தாம் கண் இழந்து படும் துன்பத்தைப் பலவாறு கூறி முறை இடுகின்றனர். "நான் தலயாத்திரை செய்து வழிநடக்க முயல்பவன். அல்லது நீங்கள் வகுத்தவழிப்படி நடக்கமுயல்பவன். நீரோ வழி வகுப்பவர். வகுத்தபடி நீங்கள் நடவாம லும் இருக்கலாம். நான் உங்களைப்போல் என்னைப் பாவிக்கமாட்டேன். கண் இழந்ததால் நீர்ச்சுழிபோல் மனம் சுழன்று மயங்குகின்றது. நாயைக் கோலில் கட்டி இழுத்துச் செல்வதுபோல் என்னைத் தடிபிடிக் கச்செய்து கறகற என்று இழுத்துக்கொண்டு போகின் ருர்கள். இந்நிலை ஒழிய அருள் செய்ய வேண்டும்' என்று வருந்தி விண்ணப்பித்துக் கொள்கின்ருர், இக் கருத்துகள் அடங்கிய பாட்டே,

'வழித்த லேப்படு வான்முயல் கின்றேன்

உன்னைப் போல என்னைப் பாவிக்க மாட்டேன் சுழித்த லேப்பட்ட நீரது போலச் -

சுழல்கின் றேன்சுழல் கின்றதென் உள்ளம் கழித்த லேப்பட்ட நாயது போல

ஒருவன் கோல்பற்றிக் கறகற இழுக்கை ஒழித்து நீஅரு ளாயின செய்யாய்

ஒற்றி யூர் எனும் ஊருறை வானே"

என்பது.

ஆருவது பாட்டில் 'இறைவரே! நான் மான்போ லும் கண்களையுடைய பெண்களின் கண் வலையில் சிக்கி வருந்திய வல்வினைக்கு அஞ்சி, உங்கள் சிலத் தையும் குணங்களேயும் சிறிதும் சிந்தித்தேன் அல் லேன். அதனுல் நான் உயிரோடு நரக வேதனையில் அழுந்தாதபடி என் கண் ஊனத்தை நீக்கி அருள் செய்வீராக. இதுவே நான் உங்களே வேண்டுவது: என்று முறையிடுகின்ருர். இதனை,