பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

காஞ்சிபுரம் சோழன், கரிகால், பெருவளத்தான் காலத்தில் மிகச் செம்மையாக இருந்தது. நான்கு இராசவீதிகளும் இவன் காலத்தில் ஏற்பட்டன. இங்குள்ள ராச வீதிகளைப் போல எங்கும் காண்டல் அரிது. இங்கு, அரண்களைப் போல மதில்களே எழுப்பியவனும் இவனே. இது குறித்தே தேவாரப் பதிகங்கள் மதில்களை வெகுவாகச் சிறப்பிக்கின்றன. இதனுல் இஃது எயில் (மதில்) கோட்டம் என்றும் கூறப்பட்டது. சங்க காலத்தில் இந்நகரம் கச்சிப் பேடு எனப்பட்டது. இந்நகரத்துப் புலவர்களாகக் கச்சிப்பேட்டு இளந்தச்சனுர், காஞ்சிக் கொற்றஞர் திகழ்ந்தனர். பெருந் தச்சனுர், நன்னுகையர். இந்நகரைச் சார்ந்த சங்கப் புலவர்களே. கச்சியப்ப சிவாசாரியரும் இத்தலத்துப் புலவரே.

பெளத்தர்கட்கு இஃது இடமாகத் திகழ்ந்தது. இங்குள்ளவர்கள் கல்வி அறிவில் சிறந்தவர்கள் என்னும் கருத்தில் அப்பரும் கல்வியைக் கரையிலாத காஞ்சிமா நகர் என்று சிறப்பித்துள்ளனர். சங்க காலத்திற்குப் பிறகும் பல்லவர் காலத்திலும் இந்நகர் சிறப்புடன் இருந்தது என்பது பாசூர் பல்லவனுர் மதில் காஞ்சிமாநகர் வாய்' என்று பாடி இருப்பது கொண்டு தெளியலாம். இத்தலத்தில் சிவஞான முனிவர் தங்கிச் சைவ சமயத்திற்கும், தமிழ் மொழிக்கும் அரிய பல தொண்டுகளைச் செய்துள்ளனர். பல நூல்களையும் இயற்றியுள்ளனர். சிவஞான போத மாபாடியம் இங்குத்தான் எழுதப்பட்டது. இவரது மாணவர் கச்சியப்ப முனிவர் தமது சீடர் பலர்க்கும் இலக்கணம் போதித்த பதியும் இதுவே.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் தமது கண்பார் வையை திருஒற்றியூரில் இழந்து, பின் இத்தலத்தில் தான் இறைவனே வணங்கி ஒரு கண் பார்வையைப் பெற்றனர்.