பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. திருக்கச்சி ஏகம்பம் * 5

இஃது ஐயடிகள் காடவர்கோன் அவதரித்த தலம். இவர் பல்லவர் மரபினர். தம் அரசைத் தம் மகனுக்கு அளித்துவிட்டுத் தலயாத்திரை செய்தவர். கூேடித்திர வெண்பா என்னும் நூலேப் பாடியவர். இது பதினுேராம் திருமுறையில் ஒரு பகுதி.

சாக்கியர் என்பவரும் சிவனடியார். இவர் வேளா களர். பெளத்த சமயத்தில் சேர்ந்தவர். பின் சைவ நெறி புகுந்தார் என்ருலும், பெளத்த வேடத்தில் தான் இருந்தார். சிவலிங்கத்தை வழிபடாமல் உண்ணுதவர். இவர் சிவலிங்கத்தை வழிபடுவதில் ஒரு புதுவழி கண்டனர். பூவுக்குப் பதிலாகக் கல்லேயே பூவாக எண்ணி இறைவர் மீது இட்டுப் பூசை செய்து இக் காஞ்சியில் முத்தி பெற்றனர். இறைவருக்குக் கல்லும், விருப்பம் ஆயிற்று என்பதை * அல்லாதவர் கல் என்பi அ1 ஞர்க் கஃதலரா மால் ' என்று சேக்கிழார் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

திருக்குறிப்புத் தொண்டரும் இப்பதியினரே. இவர் லண்ணுர் மரபினர். சிவனடியார்களின் ஆடை களே வெளுத்துத் தருபவர். ஒருநாள் இறைவரே அடியராக இவரிடம் வந்தனர். தொண்டர் அவர் பால் இருந்த கீழ் உடையை (கோவணத்தை) வெளுத்துத் தருவதாகக் கேட்டார். அவ்வாறே வந்த சிவனுரும் தந்தனர். தொண்டர் அதனை அன்று மாலைக்குள் வெளுத்துக் கொடுப்பதாகக் கூறினர். ஆனுல் அன்று விடாமழை பெய்ததனுல் கொடுக்க முடியவில்லை. அதன் பொருட்டுத் திருக்குறிப்புத் தொண்டர் தம் தலையைத் துணியை மோதும் கல்லில் மோதி உயிர் விட எண்ணினுர். இறைவர் எங்கும் உள்ளவர் ஆதலின், அக்கல்லினின்றும் கையைத் தோற்றுவித்து அவர்தம் தலே கல்லில் மொத்துண்ணுவாறு தடுத்து அவருக்குத் திருவருள் அபுரிந்தனர். அவர் வழிபட்ட கோவில் ஆடிசன்பேட்