பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தொண்டைநாட்டுப் பாடல் பெற்ற சிவதலங்கள்

டையில் உளது. கச்சியம்பதி சிறந்த வியாபாரத். தலம். இங்கு நெசவுத் தொழில் சிறப்புடையது. காஞ்சிபுரம் பட்டுச் சேலே விசேடமானது. கர்னுடகச் சண்டையில், ஐதர்அலிப் போர் நடத்தியபோது சேனைகள் தங்குதற்கு இடமாக இருந்தது. ஐதர் காலத்தில் எறியப்பட்ட குண்டின் வடுவை இன்றும் கோபுரத்தில் காணலாம். இக்கோபுரம் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது.

ஐதர் இலிங்கம் என்னும் பெயரில் ஒரு லிங்கமும் உண்டு. இந்த லிங்கம் ஐதரை ஏமாற்ற வைக்கப் பட்ட இலிங்கமாம். அதாவது ஐதர் மூலட்டான இலிங்கத்தைப் பழுதுசெய்யக் கூடும் என்று ஒர் இலிங்கத்தைக் கோவிலுக்குமுன் வைத்துச் சுற்றிலும் சுவர் எழுப்பி அதுவே மூலட்டான லிங்கம் போலக் காடடட படடதாம.

கல்யாண மண்டபம் பச்சையப்ப முதலியாரால் கட்டப்பட்டது. ஆயிரக்கால் மண்டபத்தில் காம தகன சிலையைப் பார்த்து நாம் களித்தல் வேண் டும். அகத்தீஸ்வர் மண்டபமும், சபாநாதர் மண்டபமும் சோழர்களால் கட்டப்பட்டன. இத் தலத்து நடராசர் சபை ஆகாச சபை எனப்படும். வாகன மண்டபம் விஜயநகரத்து அரசர்களால் கட்டப்பட்டது. காஞ்சிபுரத்தில் தொண்டை மண் டல ஆதீன 229-வது குருமகா சந்நிதானமாகச் சிவத் திருஞானப்பிரகாச தேசிக பரமாசாரியர் சுவாமி கள் அருள் செங்கோல் செலுத்தி வருகிருர்கள்.

காஞ்சிபுரத்திற்குச் சென் ருல் வரதர் கோவி லுக்கு மேற்கே முக்கால் கல் தொலைவில் உள்ள அட்ட புயகரத் தலத்தையும், இத்தலத்திற்கு மேற்கே அரை கல் தொலைவில் உள்ள திருத்தண்காவையும், ஏகாம்பர நாதர் கோவிலுக்கு மேற்குத் திசையில் ஒரு பர்லாங்