பக்கம்:தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவதலங்கள்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 தொண்டைநாட்டுப் பாடல்பெற்ற சிவதலங்கள்

இது தாவு கொச்சகத்தால் ஆனது. இதன் இலக்கணம் முன்பே கூறப்பட்டது. இதன் பண் நட்ட பாடை. இதனை நாட்டை இராகம் என்றும் நாட்டைக் குறிஞ்சி என்றும் கூறுவர்.

இறைவர் நிலவும் நிலையினைப் பாடுகையில் பாலருவாயர்,

'பத்தரோடு பலரும்பொலியம் மலர் அங்கைப் புனல்து வி

ஒத்தசொல்லி உல்கத்தவர்தாம் தொழுதேத்த உயர் மத்தம் வைத்த பெருமான் . (சென்னி' பிணிஇல்லவர் என்றும்தொழுதேத்தச் செய்யன் புந்திஒன்றி நினவார் வினை ஆயின தீரப்பொருளாய அந்தி அன்னதொரு பேர்ஒளியான்' என்று பாடியுள்ளனர்.

இத்தலத்து இயற்கை அழகு, மடைஇலங்கு பொழிலின் நிழல்வாய் மது வீசும் வலிதாயம் ” * மடல் இலங்கு கமுகின் பலவின் மதுவிம்மும் வலிதாயம் வண்டுவைகும் மணம் மல்கிய சோலை வளரும் வலிதாயம்' என்று சிறப்பிக்கப் பட்டுள்ளது. இத் தலத்தைத் தொழுது போற்றுவதே உயி, ராக உடையவர் பெரியவராகக் கருதப்படுவர் என்பதை, வலிதாயம் தொழுதேத்த உயிராக

பொலிய - விளங்க, அம்கை க அகம் - கை - உள்ளங்கை, புனல் - நீர், உகந்தவர் - விரும்பியவர்கள். மத்தம் - ஊமத்தம்பூ, பிணி இல்லவர் - இத் தலத்தை வணங்கிவந்த காரணத்தால் நோய் நீங்கப் பெற்றவர்கள், புந்தி - மனம். ஒன்றி . இணைந்து. அந்தி அன்ன - காலைச் சந்தி, மாலச் சந்திப் பொழுதில் தோன்றும் செவ்வானம் போன்ற மடை - நீர் மதகு. இலங்க - விளங்க. பொழில் - சோலை. மது - தேன். கமுகு பாக்குமரம். பலவின் - பலாப்பழத்தின். விம்மும் - பெசங்கும். வைகும் . தங்கிய, மல்கிய - மிக்க உள்கும் . நினைக்கும்.